விஜய்கிட்ட இருந்து இப்படி ஒரு படமா? தளபதி 66 தயாரிப்பாளர் சொன்ன தகவல்... இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. படத்திற்கான அதிகமான எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே விமர்சனங்களின் கருத்தாக உள்ளது. ஆனாலும் படம் வசூல் சாதனை புரிந்துள்ளது. தொடர்ந்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் விஜய்.

விஜய்யின் பீஸ்ட்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தல் கடந்த 13ம் தேதி கோடை கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த அளவிற்கு பிரமோஷன் உள்ளிட்டவற்றால் சன் பிக்சர்ஸ் ரசிகர்களை முன்னதாக திக்கு முக்காட செய்தனர்.

கலவையான விமர்சனங்கள்
படத்தின் பாடல்கள், ட்ரெயிலர், ப்ரமோக்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியது. அந்த அளவிற்கு படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. நெல்சனின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இந்தப் படம் நிறைவு செய்யவில்லை.

விஜய் சக்சஸ் பார்ட்டி
ஆனாலும் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. விஜய் என்ற மாஸ் ஹீரோவின் படம் எப்படி இருந்தாலும் ரசிகர்கள் அதை கொண்டாடுவார்களா என்ற கேள்வியை இந்தப் படம் எழுப்பியுள்ளது. ஆனாலும் இந்தப் படம் வெற்றிப் படம்தான் என்பதை நிரூபிக்கும்வகையில் நடிகர் விஜய், படக்குழுவினருக்கு சக்சஸ் பார்ட்டி கொடுத்துள்ளார்.

தளபதி 66 சூட்டிங்
இந்நிலையில் தனது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்றுள்ளார். வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

ஹார்ட் டச்சிங் படம்
இந்நிலையில் படம் குடும்ப கதையாக உருவாகவுள்ளதாகவும், நிறைய எமோஷனல் காட்சிகள் படத்தில் இருக்கும் என்றும் ஹார்ட் டச்சிங் படமாக அமையவுள்ளதாகவும் தில் ராஜூ சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சமீபத்திய படங்களில் ஆக்ஷன் களங்களிலேயே நடித்துவரும் விஜய் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குடும்ப சென்டிமெண்ட் படம் என்பது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











