துவங்கியது தளபதி 66 அடுத்தக்கட்ட சூட்டிங்... சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா.. ரசிகர்கள் விருப்பம்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் தளபதி 66. இந்தப்படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் தற்போது அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் நேற்றைய தினம் துவங்கியுள்ளது.
இந்த சூட்டிங்கில் தற்போது படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

கலவையான விமர்சனங்கள்
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிய நிலையில் படம் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்ய தவறியுள்ளது.

ரூ.227 கோடி வசூல்
ஆனால் படம் 50 நாட்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்த 50 நாட்களில் படம் 227 கோடி ரூபாயை சர்வதேச அளவில் வசூலித்துள்ளது. முன்னதாக படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய் படக்குழுவினருக்கு தனது வீட்டில் ட்ரீட் கொடுத்திருந்தார். இதன் புகைப்படத்தை நெல்சன் பகிர்ந்திருந்தார்.

தளபதி 66 படம்
அடுத்ததாக தமிழில் தோழா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பூஜையுடன் சூட்டிங் சென்னையில் துவங்கியது. இதையடுத்து ஐதராபாத்தில் படத்தின் முதல்கட்ட சூட்டிங் மும்முரமாக நடைபெற்றது.

சென்னைக்கு மாற்றப்பட்ட சூட்டிங்
தொடர்ந்து பெப்சி அமைப்பு தன்னுடைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரியதையடுத்து தற்போது தளபதி 66 படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த சூட்டிங் துவங்கியுள்ளது. இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர்.

பிரம்மாண்ட செட்
சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. முதலில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சூட்டிங்கை நடத்த வேண்டி அதிகமான பாதுகாப்புடன் இந்த சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

இரண்டு ரோல்களில் விஜய்
படத்தில் விஜய் இரண்டு ரோல்களில் நடித்து வருகிறார். அவரது இரண்டு விதமான கெட்டப்புகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் உற்சாகத்திற்கு காரணமாக அமைந்தன. படத்தில் பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் நிலையில், படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டு வேடங்கள்
பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில், அடுத்ததாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் விஜய்யின் படம் வெளியாக வேண்டியது அவசியம். இதன்மூலம் அவரது ரசிகர்கள் உற்சாகமடைவார்கள். விஜய் இரண்டு ரோல்களில் நடித்துள்ள படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களாக அமைந்த நிலையில், இந்தப் படமும் அந்த வரிசையில் இடம்பெறும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











