Don't Miss!
- News
பிபிசி ஆவணப் படம்- மத்திய அரசின் தடை க்கு எதிரான வழக்கு- பிப் 6-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
- Finance
தங்கத்திற்கு 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு தள்ளுபடி.. இது வாங்க சரியான சாய்ஸ் தான்..!
- Technology
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- Automobiles
இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்தோடு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
'வாரிசு' இல்லையா? இதுதான் தளபதி 66 படத்தின் டைட்டிலா? இதையாவது நம்பலாமா?
சென்னை: தளபதி 66 படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், இதுதான் அந்த டைட்டில் என சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
Recommended Video
டோலிவுட் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தளபதி 66 படம் உருவாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை ஒரு ஃபர்ஸ்ட் லுக்கும் நள்ளிரவு சரியாக 12.01க்கு செகண்ட் லுக்கும் வெளியாக உள்ளது.
கார்த்தியுடன் மோதவிருந்த சிவகார்த்திகேயன்.. இப்ப கதையே வேற!

வாரிசு
விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை பிறந்தநாள் அன்று தவிக்கவிட மாட்டார். அவர்களுக்கான சரியான ட்ரீட்டை கொடுத்து விடுவது வழக்கம். இந்நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி விடும். படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் என்ன என்பதும் தெரிந்து விடும். முன்னதாக இந்த படத்தின் தலைப்பு வாரிசு என ஒரு வதந்தி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

பூவே உனக்காக ஸ்டைலில்
ரத்தம் தெறிக்க தெறிக்க, தோட்டாக்கள் வெடித்து சிதற இப்படியே தமிழ் சினிமாவில் படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், பீஸ்ட் படமே ஒரு ஜாலியான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாலி குறைந்து ஆக்ஷன் அதிகரித்ததே அந்த படத்திற்கு பெரிய சிக்கலாக மாறி விட்டது. இந்நிலையில், பூவே உனக்காக ஸ்டைலில் தளபதி 66 படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நட்சத்திர பட்டாளம்
விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, சங்கீதா என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை டார்கெட் செய்து இந்த படம் உருவாகி வந்தாலும், இது முழுக்க முழுக்க ஒரு தமிழ் படம் என நடிகர் விஜய்யே பீஸ்ட் படத்தின் வெளியீட்டுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

வம்சம்
இந்நிலையில், தற்போது இன்னொரு டைட்டில் சமூக வலைதளங்களில் சற்று முன் உலாவத் தொடங்கி இருக்கிறது. தளபதி 66 படத்தின் டைட்டில் வாரிசு இல்லை என்றும் வம்சம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த இரண்டில் ஒரு டைட்டிலாக இருக்குமா? அல்லது புதுசா ஒரு டைட்டில் இருக்குமா என்பது இன்று மாலை 6 மணிக்கு தெரிந்துவிடும்.

அருள்நிதி படமாச்சே
வம்சம் என தளபதி 66க்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு கீழ் அஜித் ரசிகர்கள், இது அருள்நிதி, சுனைனா நடித்து பாண்டிராஜ் இயக்கிய படத்தின் டைட்டில் ஆச்சே என்றும் ரம்யா கிருஷ்ணன் இதே டைட்டிலில் சன் டிவியில் ஒரு சீரியலிலும் நடித்திருந்தாரே? என்றும் ட்ரோல்களும் ஆரம்பித்து விட்டன.