விஜய் பிறந்தநாளில் வெளியாகிறதா தளபதி 66 குறித்த அறிவிப்பு.. தீவிர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு அவரது பிறந்த நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
விஜய்யின் திரைப்படம், திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகிறது என்றாலே அவருடைய ரசிகர்ளுக்கு திருவிழாதான். கன்னாபின்னாவென ஹேஷ்டேக்குகளை கிரியேட் செய்து டிவிட்டரை தெறிக்க விடுவார்கள்.
இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் 47வது பிறந்த நாள் கொண்டாப்படுகிறது. அன்றைய நாளில் அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகுமா என எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள்.
நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளில் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதேநேரத்தில் தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளியுடன் தனது 66 வது படத்தில் நடிகர் விஜய் இணைவார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி தெரியவரும்.


Click it and Unblock the Notifications