விஜய்யின் தளபதி 66 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு? சூட்டிங்கில் இணைந்த பிரபல நடிகர்கள்!
ஐதராபாத் : நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் முதல்கட்டமாக முடிவடைந்து தற்போது இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கியுள்ளது. இந்தப் படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். தில் ராஜூ தயாரித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

தளபதி 66
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் தளபதி 66. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். தில் ராஜூ தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கி நிறைவடைந்தது.

2வது கட்ட சூட்டிங்
இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கியுள்ளது. இதில் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக படத்தின் சூட்டிங்கில் ஷாம், யோகிபாபு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நடிகர் ஷாமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை உறுதிப்படுத்தினார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
படத்தில் அவர் விஜய்யின் சகோதரராக நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை அடுத்து இந்தப் படத்தை ரசிகர்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்த்து வருகின்றனர். குடும்ப சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக இருக்கும் என்று தயாரிப்பாளர் தில் ராஜூ முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பொங்கல் 2023 ரிலீஸ்?
படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது படம் 2023 பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் தீபாவளி ரிலீசிலிருந்து தள்ளிப் போவது அவர்களுக்கு ஏமாற்றமான விஷயம்தான்.

சூட்டிங்கில் இணைந்த சரத்குமார், பிரபு
இந்நிலையில் ஷாம், யோகிபாபுவை அடுத்து படத்தில் மேலும் முன்னணி நடிகர்கள் இருவரும் இணைந்துள்ளனர். சரத்குமார் மற்றும் பிரபு இருவரும் தற்போது தளபதி 66 படத்தில் இணைந்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னணி நடிகர்கள்
குடும்ப சென்டிமெண்ட்டாக தளபதி 66 படம் உருவாகி வருவதாக தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியுள்ள நிலையில், படத்தில் சரத்குமார், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ஷாம், யோகிபாபுவும் படத்தில் இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











