தளபதி 67 பூஜை வீடியோ... மாஸாக வந்த விஜய்... இன்னும் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க
சென்னை: அடுத்தடுத்து வெளியாகும் விஜய்யின் தளபதி 67 அப்டேட் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.
யாருமே எதிர்பாராத ஸ்டார் காஸ்டிங், பிரம்மாண்டமான கூட்டணி என ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்து வருகிறது தளபதி 67 டீம்.
நேற்றிலிருந்து விஜய்யுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.

தளபதி 67 அப்டேட்
கோலிவுட்டில் கடந்த இரண்டு தினங்களாக தளபதி 67 அப்டேட் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது் முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதில் கமிட்டாகியுள்ள இயக்குநர் மிஷ்கின் தளபதி 67 ஷூட்டிங் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்நிலையில், நேற்று முதல் தளபதி 67 படத்தில் கமிட்டான நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி 67 பூஜை வீடியோ
அதன்படி விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் தளபதி 67ல் நடிக்கின்றனர். மேலும் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோவும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தற்போது தளபதி 67 பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பூஜை வீடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மாஸாக வந்த விஜய்
இந்த வீடியோவில் தளபதி 67 பூஜை நடக்கும் அரங்கிற்குள் செம்ம மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் விஜய். டார்க் கிரீன் ஷார்ட், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் மாஸ் காட்டும் விஜய் படக்குழுவினர் அனைவருடனும் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். மேலும் தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் ஆகியோரும் பூஜையில் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள்
அதேபோல் லோகேஷ் கனகராஜின் ஃபேவரைட் டீம்மான ரத்னகுமார், பிலோமின்ராஜ், உதவி இயக்குநர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். முக்கியமாக இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார் உள்ளிட்ட மேலும் சிலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். தற்போதைக்கு தளபதி 67 என்ற டைட்டிலில் பூஜை போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தது மாதிரி, பிப்ரவரி முதல் நாளில் இருந்தே அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருவது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











