தளபதி 67 பூஜைக்கு நாள் குறித்த லோகேஷ்… வெறித்தனமாக ரெடியாகும் விஜய்… அந்த டைட்டில் டீசர்..?

சென்னை: வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67'-ல் நடிக்க கமிட் ஆகியுள்ளார் விஜய்.

வாரிசு படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் தளபதி 67 ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தகவலை உறுதி செய்யும் விதமாக தளபதி 67 படம் குறித்த மாஸான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி 67 பூஜை

தளபதி 67 பூஜை

விஜய் நடித்துள்ள 'வாரிசு' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், எஸ்ஜே சூர்யா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய் தனது 67வது படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் கூட்டணி வைத்திருந்த இந்த ஜோடி, தற்போது தளபதி 67ல் மீண்டும் இணைகின்றனர். தற்காலிகமாக 'தளபதி 67' என்ற டைட்டிலில் தொடங்கும் இந்தப் படத்தின் பூஜை குறித்து தகவல் கிடைத்துள்ளது.

நாள் குறித்த லோகேஷ்

நாள் குறித்த லோகேஷ்

ஏற்கனவே தளபதி 67 படத்தின் அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாகும் என லோகேஷ் கூறியிருந்தார். தற்போது அதனை உறுதிசெய்யும் விதமாக 'தளபதி 67' பூஜை டிசம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தளபதி 67 பூஜை ரொம்பவே சிம்பிளாக நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது. இதில், விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முக்கியமான நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெடியான விஜய்

ரெடியான விஜய்

வாரிசு படத்தில் விஜய்யின் பகுதி முழுவதும் முடிந்துவிட்டதாக தெரிகிறது. இதனால், தளபதி 67 படப்பிடிப்பு அவர் முழுமையாக ரெடியாகிவிட்டாராம். தளபதி 67 பூஜை முடிந்ததும், டைட்டில் டீசருக்கான ஷூட்டிங்கை மட்டும் உடனடியாக நடத்த லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதன்பின்னர், விஜய் கிறிஸ்துமஸ் கொண்டாட லண்டன் செல்லவுள்ளதால், அவர் திரும்ப சென்னை வந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது. 'தளபதி 67' படத்துக்கான டைட்டில் டீசர், ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என விஜய்யும் லோகேஷும் முடிவு செய்துள்ளார்களாம்.

விக்ரம் டைட்டில் டீசர் மாடலில்

விக்ரம் டைட்டில் டீசர் மாடலில்

2020ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி கமலின் பிறந்தநாளை முன்னிட்டு கமல் - லோகேஷ் கூட்டணியில் விக்ரம் படம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதற்காக கமல்ஹாசனை வைத்து லோகேஷ் ஷூட் செய்திருந்த விக்ரம் டைட்டில் டீசர், படம் மீதான எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்தது. மரத்தால் செய்யப்பட்ட வீட்டினுள்ளே, நவீன துப்பாக்கிகளை எல்லாம் ஒழித்து வைத்துவிட்டு அரசியல்வாதிகளுக்கும் போலீஸார்களுக்கும் தடபுடலாக விருந்து கொடுப்பார் கமல். அதன்பின்னர் என்ன நடக்கும் என்பது தான் விக்ரம் கதை என லீட் கொடுத்திருந்தார் லோகேஷ். தற்போது அதே ஸ்டைலில் தளபதி 67 டைட்டில் டீசர் உருவாகவுள்ளதாம்.

வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்

வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்

விக்ரம் டைட்டில் டீசரில் 'ஆரம்பிக்களாங்களா' என கமல் கேட்பது பயங்கர ட்ரெண்ட் ஆனது. அதே ஸ்டைலில் தளபதி 67 டைட்டில் டீசரையும் லோகேஷ் ஷூட் செய்யவுள்ளார். விஜய்யும் அதற்கு ஓக்கே சொல்லிவிட்ட நிலையில், இதற்கான படப்பிடிப்பு வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில், விஜய்யின் லுக் எப்படி இருக்கும் என தெரிந்துவிடும் என்பதால், ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், விஜய் இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X