Don't Miss!
- News
ஆஹா.. அதென்ன ஆனந்த் அம்பானியின் குர்தா மேல பளபள "சிறுத்தை".. நீதா அம்பானி வேற கலக்கிட்டாங்களே..!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Lifestyle
ஆண்களே! நீங்க 'அந்த' விஷயத்தில் இப்படி செயல்பட்டால்... இருவரும் இருமடங்கு உச்சக்கட்டத்தை அடையலாமாம்!
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
விஜய்யின் தளபதி 67 ஹாலிவுட் ரீமேக்கா?... ரசிகர்களுக்காக லோகேஷ் வைத்திருக்கும் சர்ப்ரைஸ் அப்டேட்
சென்னை: தளபதி விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
வாரிசு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67ல் நடிக்கிறார் விஜய்.
விரைவில் தளபதி 67 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஹீரோக்கள்
வளமையாகவே
இருக்கிறார்கள்..
அவர்களுக்காக
அடித்துக்
கொள்ளாதீர்கள்..
விஜய்
சேதுபதி
அட்வைஸ்!

இறுதிக்கட்டத்தில் வாரிசு
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வாரிசு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. மேலும், வாரிசு படத்தில் சரத்குமாரின் மூன்றாவது மகனாக விஜய் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

லோகேஷுடன் மீண்டும் கூட்டணி
வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, தளபதி 67ல் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனால் அடுத்து விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிப் போயுள்ளது. இந்நிலையில், எப்போது வேண்டுமானாலும் தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் யுனிவர்ஸ்
விக்ரம் வெற்றிப் பெற்ற பின்னர், இனி எனது படங்களில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதன்படி, தளபதி 67 படமும் லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கதை விவாத பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே தளபதி 67 படம் குறித்து இன்னொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் ரீமேக்கா?
மும்பை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக தளபதி 67 உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற படத்தின் ரீமேக் உரிமையை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளார். எனவே அந்த திரைப்படத்தின் ரீமேக்காக தளபதி 67 இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ்ஜின் படங்களில் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் சாயல் இருப்பதாக ஏற்கனவே விமர்சிக்கப்பட்டன இந்நிலையில் அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.