எளிமையாக நடந்து முடிந்த விஜய்யின் தளபதி 67 படத்தின் பூஜை.. விரைவில் சூட்டிங்!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில் மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.

சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தளபதி 67 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக வெளியான ரஞ்சிதமே பாடல் 100 மில்லியன் வியூஸ்களை நோக்கி நடைபோட்டு வருகிறது.

விஜய்யின் 30 ஆண்டுகால திரைப்பயணம்

விஜய்யின் 30 ஆண்டுகால திரைப்பயணம்

இதனிடையே விஜய்யின் 30 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் தீ தளபதி பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான வியூஸ்களை பெற்று இந்தப் பாடல் சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்பு இந்தப் பாடலை பாடியுள்ள நிலையில், பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

ஆனாலும் இந்தப் பாடல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் அனிருத்தின் முந்தைய பாடலை ஒத்திருப்பதாக கமெண்ட்ஸ் எழுந்துள்ளன. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பள்ளி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பேமிலி ஆடியன்சை கவரும் வகையில் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 67 படத்தின் பூஜை

தளபதி 67 படத்தின் பூஜை

இதனிடையே நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் மிகவும் எளிமையான வகையில் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கோயிலில் இந்த பூஜை தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டில்களுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

அடுத்த வாரத்தில் அறிவிப்பு வீடியோ

அடுத்த வாரத்தில் அறிவிப்பு வீடியோ

முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அதேபோல தளபதி 67 படத்திற்கும் வீடியோ வெளியாகும் என்றும் இதன் வீடியோ சூட்டிங் வரும் 7ம் தேதி துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பணிகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

லோகேஷின் அப்டேட்டிற்காக வெயிட்டிங்

லோகேஷின் அப்டேட்டிற்காக வெயிட்டிங்

இதேபோல இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அப்டேட் கொடுக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் தெரிவித்த நிலையில், விரைவில் அதுகுறித்து அவர் அப்டேட் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, கௌதம் மேனன் என அடுத்தடுத்த நடிகர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

காஷ்மீரில் 2வது கட்ட படப்பிடிப்பு

காஷ்மீரில் 2வது கட்ட படப்பிடிப்பு

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ள நிலையில், அடுத்ததாக காஷ்மீருக்கு படக்குழு சூட்டிங்கிற்காக செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்திற்காக 4 மாதங்கள் விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவர் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X