Vijay Ajith: லியோ தான் மிஸ்ஸாகிடுச்சு... தளபதி 68-ஐ விடக் கூடாது... அஜித்தின் விடாமுயற்சி பிளான்

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், துணிவு வெற்றியைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார் அஜித்.

விஜய்யின் தளபதி 68, அஜித்தின் விடாமுயற்சி படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Vijays Thalapathy 68 and Ajiths Vidaa Muyarchi will be released in the 2024 summer

தளபதி 68 VS விடாமுயற்சி : விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் 7 ஸ்க்ரின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் லியோ ரிலீஸாகும் முன்பே தனது 68வது படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் தளபதி விஜய். அதன்படி தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குவது உறுதியாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதையும் விஜய்யே கன்ஃபார்ம் செய்துவிட்டார். இதன்மூலம் விஜய், வெங்கட் பிரபு, யுவன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது. இந்நிலையில் லியோ ஷூட்டிங் ஜூலை மாதத்திற்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஆகஸ்ட் இறுதியில் தளபதி 68 படப்பிடிப்பை தொடங்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

அதேபோல், அடுத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி தளபதி 68 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம். முன்னதாக இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவும் ஜனவரி 11ம் தேதி வெளியாகியிருந்தது. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியிருந்தன.

இதனால், விஜய்யின் லியோவுக்குப் போட்டியாக அஜித் தனது ஏகே 62 படத்தை வெளியிட ஆசைப்பட்டார். ஆனால், விக்னேஷ் சிவன் சொதப்பியதால் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். அதனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்காத நிலையில், ஜூன் மாதம் தான் ஏகே 62 படமான விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதற்குள் தளபதி 68 அப்டேட்டும் வந்துவிட்டதால், அஜித் இப்போதே ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டாராம்.

அதன்படி, விஜய்யின் தளபதி 68 வெளியாகும் அதே தேதியில் தனது விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என மகிழ் திருமேனிக்கு ஆர்டர் போட்டுள்ளாராம். இதனால், அடுத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி கோலிவுட்டில் செம்ம தரமான ட்ரீட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். வாரிசு - துணிவு ரேஸில் விஜய், அஜித் இருவருமே மாஸ் காட்டினார்கள். அதேபோல், தளபதி 68 - விடாமுயற்சி இரண்டு படங்களுமே தெறிக்கவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X