Thalapathy 68: விஜய்-அட்லீ கூட்டணிக்கு திடீர்ன்னு என்னாச்சு... தளபதி 68 இயக்குநர் இவரா..?
சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் பிஸியாக காணப்படுகிறார்.
ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
தளபதி 68 படத்தை முதலில் அட்லீ இயக்கவுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக தெலுங்கு இயக்குநர் ஒருவர் விஜய்யுடன் இணையவுள்ளாராம்.

விஜய்-அட்லீ கூட்டணிக்கு திடீர்ன்னு என்னாச்சு:விஜய் தற்போது லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
அதன்படி, தளபதி 68 படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. தெறி, மெர்சல், பிகில் என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள விஜய் - அட்லீ காம்போ, தளபதி 68 படத்தில் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தளபதி 68 படத்தில் அட்லீக்கு பதிலாக டோலிவுட் இயக்குநர் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜவான் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கும் அட்லீ, இன்னும் தளபதி 68 ஸ்க்ரிப்ட்டை முடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் தளபதி 69ல் அட்லீயுடன் இணையலாம், தளபதி 68 படத்திற்கு புதிய இயக்குநருடன் கூட்டணி என விஜய் தான் முடிவு செய்துள்ளாராம்.
அதன்படி, விஜய்யின் தளபதி 68 படத்தை கோபிசந்த மலினேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் பாடிகார்டு, வின்னர் உட்பட சில படங்கள் இயக்கியுள்ள கோபிசந்த் மலினேனி, இறுதியாக பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தை டைரக்டர் செய்திருந்தார். இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து கோபிசந்த் மலினேனி விஜய்க்கு ஒரு கதை சொன்னதாக தெரிகிறது.

ஜவான் ரிலீஸ் தள்ளிப் போனால் அட்லீயுடன் இணைய தாமதமாகும் என்பதால், விஜய் கோபிசந்த் மலினேனிக்கு ஓக்கே சொல்லிவிட்டாராம். முக்கியமாக இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். மேலும், விஜய்க்கு 135 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கவும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரெடியாக உள்ளதாம். அதனால் தான் விஜய்யும் இப்படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது.
இதனால், விஜய் - அட்லீ கூட்டணி தளபதி 69ல் இணையலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய்யின் தளபதி 68 படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளது குறித்து, விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும், லியோ ரிலீஸானதும் தளபதி 68 படப்பிடிப்பை தொடங்கலாம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











