Vijay Ajith: அஜித்தை சைலண்டாக கார்னர் செய்த விஜய்... விடாமுயற்சிக்கு ஆப்பு வைக்கும் தளபதி 68!
சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தளபதி 68 அப்டேட் மூலம் அஜித்தின் விடாமுயற்சிக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அஜித்தை கார்னர் செய்த விஜய்: விஜய்யின் லியோ படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் ஆயுத பூஜைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவும் ஒரேநாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது.
அதனால், விஜய்யின் லியோ படத்துடன் தனது ஏகே 62 படத்தை களமிறக்க முடிவு செய்திருந்தார் அஜித். ஆனால், ஏகே 62 இயக்குநராக கமிட்டாகிருந்த விக்னேஷ் சிவன் திடீரென நீக்கப்பட்டதால் அஜித்தின் பிளான் மொத்தமாக சொதப்பியது. இதனால், தற்போது விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டாக, ஏகே 62 விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகவுள்ளது.
ஆனாலும், அஜித் நினைத்தமாதிரி இந்தப் படத்தை விஜய்யின் லியோவுக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய முடியாது. அதேபோல், அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அடுத்த மாதம் தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குள்ளாக விஜய் தனது தளபதி 68 டீமை கன்ஃபார்ம் செய்துவிட்டார். அதன்படி, தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைப்பாளராக கமிட்டாகவுள்ளார். இதனால், இப்போது விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள், விஜய்யின் தளபதி 68 பக்கம் சென்றுவிட்டனர். ஆகமொத்தம் எப்போதுமே அஜித்தை விட விஜய் தான் ரசிகர்களின் டாக் ஆஃப் ஸ்டாராக வலம் வருகிறார். வாரிசு வெளியாகும் முன்பே லோகேஷுடன் இணையும் தளபதி 67 படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார் விஜய்.

தற்போதும் அதேபோல் லியோ வெளியாகும் முன்பே தளபதி 68 படத்திற்கு ஹைப்பை ஏற்றிவிட்டுள்ளார். இது அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு நெருக்கடி தான் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்கவே இல்லை. அதனால், விடாமுயற்சி படத்துடன் விஜய்யின் தளபதி 68 வெளியாகுமா என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தளபதி 68 படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், கோபிசந்த் மலினேனி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் எதிர்பாராத டிவிஸ்ட்டாக யாருமே நினைத்துப் பார்க்காத கூட்டணியில் தளபதி 68 திரைப்படம் உருவாகவுள்ளது. அதேபோல், வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கலாம் என சொல்லப்பட்டது, ஆனால் தற்போது அதுவும் இல்லையென்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











