»   »  விஜய்யின் தெறி டீசர் பொங்கலுக்கு வெளியாகிறதா?

விஜய்யின் தெறி டீசர் பொங்கலுக்கு வெளியாகிறதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தெறி டீசரை படக்குழுவினர் பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தெறி. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.


படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றை தற்போது இரவு பகலாக அட்லீ படம் பிடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Vijay's Theri Teaser Release on Pongal Festival?

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது.


இந்நிலையில் இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த விஜய் படக்குழுவினருடன் இணைந்து திட்டமிட்டு இருக்கிறாராம்.


இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் படத்தில் 3 வேடங்களில் விஜய் நடித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.


டீசரை பொங்கல் தினத்தில் வெளியிடும் படக்குழுவினர் பட வெளியீட்டை தள்ளி வைக்கத் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

English summary
Vijay's Theri Shooting now Forward to Climax. Sources said the Movie First Look Teaser Release on Pongal Festival.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil