100 கோடி கிளப்பில் இணைந்த விஜய்யின் டாப் 5 படங்கள்...எதுன்னு தெரியுமா
சென்னை : எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் இவர் நடித்தால் போதும், இவரது மாசுக்காகவே படம் ஹிட் ஆகி விடும் 100 கோடி வசூல் கன்ஃபார்ம் என தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களை தான் சொல்ல முடியும்.
அப்படி ஒரு மாஸ் இமேஜ் கொண்ட நடிகர் விஜய். இதற்கு உதாரணம் சமீபத்தில் ரிலீசான விஜய்யின் பீஸ்ட் படத்தையே கூறலாம். இந்த படம் நெகடிவ் விமர்சனங்களை அதிகம் பெற்ற போதிலும் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.
கில்லி படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படங்கள் அனைத்தும் குறைந்தது 50 கோடிகளையாவது வசூல் செய்து விடும். அப்படி 100 கோடி கிளப்பில் இணைந்த விஜய்யின் டாப் 5 படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

பிகில்
2019 ம் ஆண்டு டைரக்டர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் பிகில். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்ட இந்த படம் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வசூலை பெற்ற விஜய் படம் இது தான். இந்த படம் உலகம் முழுவதும் 295.28 கோடிகளை வசூல் செய்தது.

மெர்சல்
பிகில் படத்திற்கு முன் அட்லி - விஜய் கூட்டணியில் 2017 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடித்த இந்த படம் 260 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்தது.

சர்கார்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோருடன் இணைந்து விஜய் நடித்த படம் சர்கார். சர்ச்சை, வழக்கு போன்றவற்றை சந்தித்தாலும் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 252 கோடி வசூல் செய்தது.

மாஸ்டர்
கொரோனா பெருந்தொற்று காலத்திலும், வெறும் 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு, அதிக வசூலை பெற்ற முதல் படம் விஜய்யின் மாஸ்டர் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் 223 கோடிகளை வசூல் செய்தது.

பீஸ்ட்
சமீபத்தில் ரிலீசான விஜய்யின் பீஸ்ட் படம் தான் அதிக நெகடிவ் விமர்சனங்களை பெற்ற விஜய் படம். இருந்தாலும் பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்தது. இந்த மிக மெதுனவாக வசூலை பெற்றாலும் உலகம் முழுவதும் 145 கோடிகளை வசூல் செய்தது.


Click it and Unblock the Notifications











