அப்போ விஜய் சிஎம் கிடையாதா?.. வெளியான எக்ஸிட் போல்.. மே 4 என கம்பு சுத்தும் தவெகவினர்!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த வாரத்தில் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம் வரவிருக்கின்றன. எப்படியும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று தவெகவினர் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்) தற்போது வெளியாகியிருக்கின்றன. அவற்றில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என கணிப்புகள் சொல்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் கட்சி தனித்து களமிறங்கியது. விஜய் மட்டும் திருச்சி கிழக்கிலும், பெரம்பூர் தொகுதியிலும் களம் கண்டார். ஒரு தொகுதியிலாவது வென்றுவிட மாட்டோமா என்ற நினைப்பில்தான் அவர் இரு தொகுதிகளில் களம் கண்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் விஜய்யோ, தவெகவினரோ இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பரப்புரையை தொடங்கியபோது இனிமேல் தமிழ்நாடே ஸ்தம்பிக்க போகிறது என்று தவெகவினர் சோஷியல் மீடியாவில் அலற விட்டார்கள்.

சொதப்பிய விஜய்: ஆனால் அவரோ பெரம்பூரில் ஆரம்பித்ததிலிருந்து மொத்தமே 15 நாட்களுக்குள்தான் பரப்புரையையே செய்தார். முக்கியமாக பல தொகுதிகளுக்கு விஜய்யின் பரப்புரை வாகனம் செல்லவே இல்லை. இதனால் அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் உச்சக்கட்ட சோகமடைந்தார்கள். சிலரோ விஜய்யின் பொம்மையை வைத்தும், ஹாலோகிராமில் விஜய்யின் உருவத்தை வரவழைத்தும் பரப்புரையை மேற்கொண்ட கூத்துக்களை தமிழ்நாடு இந்தத் தேர்தலில் சந்தித்தது. உண்மையில் இந்த பரப்புரையில் விஜய் சொதப்பிவிட்டார் என்பதுதான் தவெகவினர் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் உண்மையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில்களில் விஜய்: தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஆக்டிவ்வாகவே இருக்கிறார் விஜய். நேற்றுகூட திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கே சத்ரு சம்ஹார பூஜை நடத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்று நெக்குருகி வழிபட்டார். இதையெல்லாம் பார்த்த எதிர் தரப்பினர், 'விஜய்க்கு தோல்வி பயம்தான் காரணம். அதனால்தான் கோயில் கோயிலாக செல்கிறார்' என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
எக்ஸிட் போல் கணிப்புகள்: அதேசமயம் எப்படியும் தவெக ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தவெகவினர் இருக்கிறார்கள். அமைச்சரவை பட்டியலும் பனையூரில் தயாராகிவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அதுதொடர்பான ஒரு பட்டியலும் சோஷியல் மீடியாவில் லீக்கானது. சூழல் இப்படி இருக்க இன்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதில் திமுக கண்டிப்பாக 160 தொகுதிகள்வரை வென்று ஆட்சியமைக்கும்; இரண்டாவது இடத்தில் அதிமுக வரும்; அந்தக் கட்சி 110 தொகுதிகள் வரை சீட்டுகளை பெறும் எனவும் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
தவெகவின் நிலைமை?: எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட தவெக பத்திலிருந்து 25 தொகுதிகள் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எக்ஸிட் போல் முடிவுகளை பார்த்து தவெகவினர் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். அந்தக் கட்சியை சேர்ந்த சிலரும், பொறுப்பில் இருப்பவர்களும் இந்த எக்ஸிட் போல் எல்லாம் சும்மா; ஆளுங்கட்சியின் கைப்பாவைகள் எடுத்த கணிப்புகள். கண்டிப்பாக மே நான்காம் தேதி தவெக பெரும்பான்மையோடு வெற்றி பெறும்; அப்படியே தோற்றாலும் குறைந்தபட்சம் 80 தொகுதிகள்வரை வென்று கெத்து காண்பிக்கும் என்று கூறிவருகிறார்கள். இதை பார்த்த சிலரோ, தவெகவினர் ஏன் இப்படி தனி உலகத்தில் வாழ்ந்துவருகிறார்கள்; எக்ஸிட் போல் வந்த பிறகும் தவெகதான் ஆட்சியமைக்கும் என கம்பு சுற்றுகிறார்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications