twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி விஜய்யின் ட்விட்டர் பக்கம்... 3.2 மில்லியன் பாலோயர்கள்... ரசிகர்கள் உற்சாகம்

    |

    சென்னை : நடிகர் cசமூக வலைதளங்களில் அதிகமாக செயல்படாதவர்.

    ட்விட்டரில் அவ்வப்போது சில ட்வீட்களை மட்டுமே முக்கியமாக பதிவிட்டு வருகிறார்.

    தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் 3.2 மில்லியன் பாலோயர்களை எட்டியுள்ளார்.

    லஞ்சம் கொடுக்கலாம் தப்பில்லை... விஜய் சேதுபதி ஓபன் டாக்... மாஸ்டர்செப் தமிழ் புது ப்ரமோ வெளியீடு லஞ்சம் கொடுக்கலாம் தப்பில்லை... விஜய் சேதுபதி ஓபன் டாக்... மாஸ்டர்செப் தமிழ் புது ப்ரமோ வெளியீடு

    அமைதியான விஜய்

    அமைதியான விஜய்

    நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் இல்லாதவர். பொது நிகழ்ச்சிகளில்கூட அதிகமாக பங்கேற்காதவர். அப்படி பங்கேற்றாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து விடுவார். சமூக வலைதளங்களில் கூட அதிகமாக செயல்படுவதில்லை.

    சிறப்பான செயல்பாடு

    சிறப்பான செயல்பாடு

    தன் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் வகையில், தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதிலும் தன்னுடைய படங்களை வெற்றிப்படங்களாக மாற்றுவதிலும் மட்டுமே அவரது கவனம் காணப்படுகிறது. அவரது ஒவ்வொரு படமும் அவரது முந்தைய படங்களின் ரெக்கார்டை பீட் செய்வதில் சிறப்பாக உள்ளன.

    போஸ்டர்கள் வெளியீடு

    போஸ்டர்கள் வெளியீடு

    இந்நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்த இரண்டு போஸ்டர்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்டிருந்தார். இவ்வாறு அளவான செயல்பாட்டுடன் அவர் தனது ட்விட்டரில் செயல்பட்டு வருகிறார்.

    3.2 மில்லியன் பாலோயர்கள்

    3.2 மில்லியன் பாலோயர்கள்

    இருந்தாலும் தளபதி விஜய் என்றாலே மாஸ்தான் என்பதற்கு உதாரணமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரை தொடரும் பாலோயர்கள் தற்போது 3.2 மில்லியனை எட்டியுள்ளனர். சமீபத்தில் அவர் வெளியிட்ட பீஸ்ட் படத்தின் போஸ்டர்களும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

    English summary
    Thalapathy Vijay's twitter followers reached 3.2 Million
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X