சர்கார் விழாவில் தர்ம சங்கடத்துக்கு ஆளான விஜய்: இப்படி பண்ணிட்டீங்களே பிரசன்னா

Recommended Video

முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்'... விஜய் அதிரடி வீடியோ

சென்னை: சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு வீழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு பிரம்மாண்டமான ஆடியோ லாஞ்ச் என பல நாட்களாக தண்டோரா போடப்பட்டு அறிவித்தபடியே நேற்று பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கினார். ஆனால் அவர் ஆங்கர் செய்த விதம் பலரை ஆங்க்ரி பேர்டாக மாற்றியது. டிவி பார்க்கும் நமக்காவது கையில் ரிமோட் இருக்கிறது, சேனலை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் பாவம் கலாநிதிமாறன் என்ன செய்வார்? சொந்த தயாரிப்பு என்பதால் வேறு வழியில்லாமல் உர்ரென உட்கார்ந்து இருந்தார். பாஸ் கோவப்படுராரு... என்று சொல்வது போல் புன்னகை தொலைந்த அவரின் முகத்தை கேமரா மேன் அடிக்கடி காட்டிக்கொண்டே இருந்தார்.

Vijays uncomfortable situation in Sarkar event!

விஜய் இப்போதெல்லாம் எல்லோரையும் நண்பான்னு சொல்றார். அதனால் நான் நண்பா என்று சொல்லும்போது நீங்க அலர்ட் ஆகனும். நான் சொல்ற விஜய் டயலாக்குல மீதிய நீங்க சொல்லனும்னு சொன்னதும் விஜய் ரசிகர்கள் உற்சாகமானார்கள். செம்ம எனர்ஜியோட இருந்த ரசிகர்களையும், தப்பு தப்பா விஜய் டயலாக்கச் சொல்லி சொய்ங்... என்று ஆக்கிவிட்டார். நிகழ்ச்சியில் வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி என நடிகர்கள் பேசியது கலகலப்பூட்டியது. விவேகம் படத்தில் "நண்பா... நண்பா.." என்று விவேக் ஓபராய் சொல்வதை விட எரிச்சலூட்டியது பிரசன்னாவின் "நண்பா". இனிமேல் விஜய்யே யாரையும் "நண்பா"ன்னு அழைப்பதற்கு யோசிப்பார்.

டிஜிட்டல் முறையில் எப்படி பாடல் வெளியிடுவது தெரியுமா? நாங்கள் கைடு செய்கிறோம் என போனை எடுங்கள், அன்லாக் செய்யுங்கள், கூகுளை திறங்கள் என கோரசாகச் சொன்னது, கஸ்டர்மர் கேர் கேர்ள் பேச்சைவிட பொறுமையை இழக்கச் செய்தது.

சன் டிவியில் தொகுப்பாளருக்கு பற்றாக்குறையா? ஏன் இவ்வாறு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் தொகுத்து வழங்கப்போகும் "சொப்பன சுந்தரி" நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது. அப்படியே நீங்க செக் பண்றதா இருந்தாலும் அதுக்கு நாங்க தான் கிடைத்தோமா என்று ரசிகர்கள் கேக்குறாங்க!

சொதப்பிக் கொண்டிருந்த நிகழ்ச்சியை டாப் கியர் போட்டு தூக்கி நிறுத்தியது விஜய் தான். அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கார்.. உசுப்பி விடுறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்க ஜம்முன்னு இருக்கும் என்று வாழ்வியல் ரகசியத்தையே பஞ்ச் டயலாக்காக சொன்னார்.

விஜய் மட்டும் வந்து அந்த நிகழ்ச்சியில் அவ்வளவு விஷயங்கள் பேசவில்லை என்றால், ரசிகர்கள் என்ன ஆகியிருப்பார்கள் என யோசிக்கவே பயமாக இருக்கிறது. எல்லோருக்கும் விஜய் நன்றி சொல்லும்போது, எங்க பேரையும் சொல்லுங்க என்பது போல.. பிரசன்னா வந்து காதில் கிசுகிசுத்தார். என்னத்த சொல்றதுன்னு தர்ம சங்கடப்பட்ட விஜய் எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா என மனதை திடப்படுத்திக் கொண்டு நீங்க ரெண்டுபேரும் நிகழ்ச்சிய நல்லா கொண்டு போனீங்க என முடித்தார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X