பெற்றோருடன் சுற்றுலா... வைரலாகும் புகைப்படம்... அன்னையர் தினத்தை கலர்புல்லாக்கிய விஜய்!
சென்னை : நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதன் டைட்டில் அடுத்த மாதம் அவரது பிறந்தநாளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அவரது தந்தையுடன் அவருக்கு பிணக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

விஜய் பிறந்தநாளில் டைட்டில் ரிலீஸ்
படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. படத்தின் டைட்டில் வெளியாகாத நிலையில், அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல தான் கடந்த ஆண்டிலும் பீஸ்ட் படத்தின் டைட்டில் அவரது பிறந்தநாளில்தான் வெளியானது.

குடும்ப சென்டிமெண்ட்
குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய் படத்திற்கே உரிய ஆக்ஷன், காமெடியும் சிறப்பாக இருக்கும் என்று தயாரிப்பாளர் தில் ராஜூ முன்னதாக தெரிவித்திருந்தார். விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

தந்தையுடன் மனக்கசப்பு
விஜய்க்கும் அவரது தந்தை எஸ்ஏசிக்கும் கடந்த சில மாதங்களாகவே பிணக்கு காணப்படுகிறது. அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் ஒதுங்கியுள்ளார் விஜய். அவரது பெற்றோரை அவர் பார்ப்பதில்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்ஏசி அளித்துள்ள பேட்டியில் தன்னையும் தன்னுடைய மனைவியையும் விஜய் மாதத்திற்கு ஒருமுறையாவது வந்து பார்க்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

வைரலாகும் புகைப்படம்
இவர்களின் மனக்கசப்பு தீர்க்கப்பட்டு விஜய் தன்னுடைய தந்தையை பார்க்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாகவும் காணப்படுகிறது. இன்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் விஜய் தன்னுடைய பெற்றோருடன் முன்னதாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெற்றோருடன் புகைப்படம்
அவர் தன்னுடைய பெற்றோருடன் பனிப் பிரதேசத்தில் சுற்றுலா சென்றபோது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் மிகவும் இளவயதாக காணப்படுகிறார். அவரது பெற்றோரும் மிகவும் இளமையாக காணப்படுகின்றனர். தொடர்ந்து இந்தப் புகைப்படம் சிறப்பான பின்புலத்தில் அழகாக எடுக்கப்பட்டுள்ளது.

கண்கலங்கிய எஸ்ஏசி
சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தன்னுடைய மகன் மாதத்தில் ஒரு நாளாவது அரை மணிநேரமாவது தங்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று கூறிய எஸ்ஏசி பேட்டியின்போது கண்கலங்கினார். இந்நிலையில் இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











