ரிகர்சலில் கூட சிங்கிள் டேக்தான்... மெர்சல் செய்த விஜய்... ட்ரெண்டாகும் ரஞ்சிதமே மேக்கிங் வீடியோ
சென்னை: ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
விஜய் - வம்ஷி பைடிப்பள்ளி கூட்டணி முதன்முறையாக இணைந்த இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை 300 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலின் இறுதியில் சிங்கிள் ஷாட்டில் ஆடி அசத்தியிருந்தார் விஜய். இந்நிலையில், இந்த மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ் மாஸ்டர் விஜய்
விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 11ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார், தில் ராஜூ தயாரித்திருந்தார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, முக்கியமான பாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்த வாரிசு திரைப்படம் இதுவரை ரூ.300 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரஞ்சிதமே ரஞ்சிதமே
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. முக்கியமாக ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடி தீர்த்தனர். இந்தப் பாடலின் இறுதியில் சிங்கிள் ஷாட்டில் கட்டே இல்லாமல் ஸ்பீடாக ஆடி அசத்தியிருந்தார் விஜய். இந்த சீனை மட்டுமே ஏராளமான ரசிகர்கள் ரீல்ஸாக செய்து ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், ரஞ்சிதமே பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

ரிகர்சலில் சிங்கிள் டேக்
வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு ஜானி மாஸ்டர் கோரியோகிராப் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது வெளியான வீடியோவில் ரஞ்சிதமே பாடலுக்கு விஜய் ரிகர்சல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக கடைசியாக வரும் அந்த சிங்கிள் ஷாட் நடனத்தை விஜய் ரிகர்சல் செய்கிறார். இந்த ரிகர்சலில் கூட விஜய் பிரேக் விடாமல் சிங்கிள் ஷாட்டில் ஆடுவது ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது. ஜானி மாஸ்டருக்கும் ராஷ்மிகாவுக்கும் நடுவில் விஜய் அசத்தலாக ஆடும் இந்த மேக்கிங் வீடியோவை ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விரைவில் ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமான மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள வாரிசு படத்துக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம் இந்தப் படம் விரைவில் ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. வாரிசு சக்சஸ் ஆனதால் தளபதி 67 ஷூட்டில் பிஸியாகிவிட்டார் விஜய். அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடியை நெருங்கிவிட்டது வாரிசு. அதனால் விரைவில் ஓடிடி ரிலீஸ் தேதியை வாரிசு படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











