திடீரென டிவிட்டரில் ட்ரெண்டாகும் ரஞ்சிதமே... ஓடிடிக்கு முன்பே HD பிரிண்டில் ரிலீஸான வாரிசு..?

சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் 11ம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் 25 நாட்களை கடந்து ஓடிவரும் வாரிசு இதுவரை ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படம் வரும் 22ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இணையத்தில் HD குவாலிட்டியில் வெளியாகியுள்ளதோடு, திடீரென ரஞ்சிதமே ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

 வாரிசு ஓடிடி அப்டேட்

வாரிசு ஓடிடி அப்டேட்

விஜய் நடித்துள்ள வாரிசு அதிக எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 11ம் தேதி வெளியானது. வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். ரிலீஸாகி 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் வாரிசு, வரும் 22ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இணையத்தில் வெளியான வாரிசு

இணையத்தில் வெளியான வாரிசு

திரையரங்குகளில் குடும்பங்கள் கொண்டாடிய விஜய்யின் வாரிசு படத்துக்கு, ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்தப் படம் HD தரத்தில் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓடிடி ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக வாரிசு திரைப்படம் 22ம் தேதிக்கு முன்னதாக ஓடிடியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ட்ரெண்டாகும் ரஞ்சிதமே ரஞ்சிதமே

ட்ரெண்டாகும் ரஞ்சிதமே ரஞ்சிதமே

தமன் இசையில் வாரிசு படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு ரசிகர்கள் திரையரங்குகளை தெறிக்கவிட்டனர். இந்தப் பாடலின் இறுதியில் சிங்கிள் ஷாட்டில் கட்டே இல்லாமல் ஸ்பீடாக ஆடியிருந்தார் விஜய். முக்கியமாக கடைசியாக வரும் அந்த நடனத்தை விஜய் பிரேக் விடாமல் சிங்கிள் ஷாட்டில் ஆடி ரிகர்சல் செய்த வீடியோவும் ரசிகர்களிடம் ட்ரெண்டானது. இந்நிலையில், இந்தப் பாடலின் முழு வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

 ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஞ்சிதமே பாடலுக்காக வெயிட்டிங்கில் இருந்த ரசிகர்கள், இப்போது வெளியான முழுமையான வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஜிமிக்கி பொண்ணு, வாரிசு செலிப்ரேஷன் பாடல்களைத் தொடர்ந்து ரஞ்சிதமே பாடலின் முழு வீடியோவும் தற்போது ஹெச்டியில் வெளியாகியுள்ளது. விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம் எஸ்ஜே சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள வாரிசு, இந்தாண்டின் முதல் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்த வாரிசு திரைப்படம் இதுவரை ரூ.300 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X