வாரிசு தியேட்டர் ரைட்ஸ்… துணிவுக்குப் போட்டியாக களமிறங்கிய தயாரிப்பு நிறுவனம்… இனி தெறிமாஸ் தான்!

சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அதன் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியது.

இந்நிலையில், தற்போது வாரிசு வெளியாவதில் சிக்கல்கள் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்க, படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் தட்டித் தூக்கியுள்ளது.

பொங்கல் ரேஸில் வாரிசு - துணிவு

பொங்கல் ரேஸில் வாரிசு - துணிவு

வரும் பொங்கல் தினத்தில் கோலிவுட் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா காத்திருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யும் அஜித்தும் நேருக்கு நேர் மோதுகின்றனர். விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு காணப்படுகிறது. இதுவரை பொங்கல் ரிலீஸில் விஜய்யின் கையே ஓங்கியுள்ளது. இதனால், இந்த முறை பொங்கல் ரேஸிலும் விஜய் கெத்து காட்டுவாரா இல்லை அஜித்தின் துணிவு சூப்பர் ஹிட் அடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அஜித்துடன் இணைந்த உதயநிதி

அஜித்துடன் இணைந்த உதயநிதி

இந்நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதனால், துணிவு படத்தின் ப்ரோமோஷன்ஸ் எல்லாம் தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், கடந்த ஒரு வாரமாகவே துணிவு படத்துக்கான தியேட்டர்ஸ் புக்கிங் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், விஜய்யின் வாரிசு படத்திற்கு எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்குமா என கேள்விகள் எழுந்தன.

சிக்கலில் விஜய்யின் வாரிசு

சிக்கலில் விஜய்யின் வாரிசு

இதனிடையே, விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால் வாரிசு ரிலீஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு சீக்கிரம் முடிவு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே விஜய்யும் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

க்ரீன் சிக்னல் கிடைத்தது?

க்ரீன் சிக்னல் கிடைத்தது?

இந்நிலையில், விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், வாரிசு தியேட்டர் ரைட்ஸையும் வாங்கியுள்ளதால், ப்ரோமோஷன்கள் வேறலெவலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அஜித்தின் துணிவுக்குப் போட்டியாக விஜய்யின் வாரிசு படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வாங்கியுள்ளது, பொங்கல் ரேஸில் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X