வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ கம்மிங் ஒத்து.. விஜய் வாய்ஸில் ‘ரஞ்சிதமே’ பாடல் கேட்க ரெடியா?

சென்னை: நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரமோ ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளிவர காத்திருக்கிறது. இப்பவே படத்திற்கு 280 கோடி வரை ப்ரீ ரிலீஸ் பிசினஸ் நடைபெற்று விட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், ஓவர்சீஸ் மார்க்கெட்டிலும் நடிகர் விஜய்யின் கொடி உயர பறந்து வருவதாக கூறுகின்றனர்.

பொங்கலுக்கு வாரிசு

பொங்கலுக்கு வாரிசு

வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இந்த ஆண்டு தீபாவளி தியேட்டர்கள் களைகட்டாத நிலையில், வரும் பொங்கல் பிரம்மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை தியேட்டர்கள் சேதம் அடையப் போகுதோ தெரியவில்லை என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஃபர்ஸ்ட் சிங்கிள்

வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே தமன் இசையில் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் காட்சிகள் சில லீக்காகி இருந்தன. உடனடியாக பாடலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் எல்லாம் பக்காவாக முடிந்த நிலையில், இன்று வெளியாகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

திடீரென இன்று காலை தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 10.45க்கு அப்டேட் என வந்ததும் ரசிகர்கள் இன்பதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ வெளியாகும் என்கிற ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

ஆட்டம் போட ரெடி

ஆட்டம் போட ரெடி

விஜய்யின் பாடல்கள் வெளியானாலே உலகம் முழுவதும் ரசிகர்களை போலவே பிரபலங்களும் ஆட்டம் போட்டு ரீல்ஸ்களை போடுவது வழக்கமாகி விட்டது. அரபிக் குத்து பாடல் எல்லாம் வெறித்தனமாக ரெக்கார்டு செய்தது. இந்நிலையில், ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போட ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் ரெடியாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X