Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...
- News
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபர் அல் சிசி வருகை! டெல்லியில் உற்சாக வரவேற்பு
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஹாட் சீட்.. பவர்.. வாரிசு ட்ரெய்லரில் ஹெவியாக அடிக்கும் அரசியல் வாடை.. அனல் பறக்கும் விவாதம்!
சென்னை: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கிளம்பிய சூப்பர்ஸ்டார் சர்ச்சையே இன்னமும் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், வாரிசு ட்ரெய்லர் அரசியல் சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்துள்ளது.
ஆட்டம், பாட்டம், காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட், ஆக்ஷன், பஞ்ச் வசனம் என தீப்பொறி பறக்கிறது வாரிசு படத்தின் ட்ரெய்லரில் அதே சமயம் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களில் அரசியல் வாடையும் ஹெவியாக அடிப்பதாக ட்ரோல்களும் விவாதங்களும் கிளம்பி உள்ளன.
ஹாட் சீட் பற்றியும் பவர் பற்றியும் உள்ள பஞ்ச் வசனங்கள் நடிகர் விஜய்யின் அரசியல் ஆசையை முன் வைத்தே எழுதப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அடுத்தடுத்த படங்களில் பிசியாகும் கார்த்தி - அடுத்த படத்தோட சூட்டிங் அப்டேட்டை தெரிஞ்சிக்கலாமா!

சீட்டோட ஹீட்
போய் உங்க அப்பன் கிட்ட சொல்லு இந்த சீட்டோட ஹீட் என்னன்னு பார்க்கப் போற என பிரகாஷ் ராஜ் பேசும் வசனமும் அதனை தொடர்ந்து அந்த சீட்டில் வந்து அமரும் நடிகர் விஜய்யின் பஞ்ச் வசனமும் அப்படியே அரசியல் என்ட்ரிக்கு அடிகோடிடுவதாக சோஷியல் மீடியாவில் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

2026 தேர்தல்
நடிகர் விஜய் 2026 தேர்தலை நோக்கியே அடுத்தடுத்த படங்களில் நடிப்பாரா என்றும் படத்தில் வரும் வசனங்களும் காட்சிகளும் அதை நோக்கியே நகருமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கி தேர்தல்களில் போட்டியிட வைத்து வரும் நடிகர் விஜய் நேரடியாக அரசியலில் குதிக்கவும் ரெடியாகி விட்டார் என விவாதங்கள் கிளம்பி உள்ளன.

பவர் சீட்ல இல்லை
"பவர் சீட்ல இருக்காது சார்.. அதுல வந்து ஒருத்தன் உட்காருறான்ல அவன் கிட்டதான் இருக்கு.. நம்ம பவர் அந்த ரகம்" என சேர்மேன் சீட்டில் அமர்ந்து கொண்டு நடிகர் விஜய் பேசும் வசனம் அப்படியே அரசியல் சீட்டுக்கான பஞ்ச் வசனங்கள் என நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் பட்டமா
வாரிசு படத்தின் வசனங்கள் அரசியலை மையமாக வைத்து உள்ளன என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டு வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் பட்டம் என்கிற பவரைத்தான் விஜய் சொல்கிறார். சூப்பர் ஸ்டார் பட்டம் நிரந்தரம் இல்லை என்றும் அதில் வந்து அமர்ந்து விட்டார் விஜய் என்றும் விஜய் ரசிகர்கள் இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சண்டை செய்து வருகின்றனர்.