மெர்சல் படத்தை முந்திய வாரிசு.. சர்வதேச அளவில் இவ்ளோ கோடி லாபமா?

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கான வரவேற்பு அதிகமாக காணப்படுகிறது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது.

விஜய்யின் படங்கள் எப்போதுமே அதிகமான எதிர்பார்ப்பை மட்டுமில்லாமல் சிறப்பான வரவேற்பையும் பெற்றுவிடும். அந்த வரிசையில் வாரிசு படமும் இணைந்துள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அட்லி இயக்கத்தில் தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பெற்றன. தொடர்ந்து பீஸ்ட், வாரிசு படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

பீஸ்ட் மற்றும் வாரிசு படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. ஆயினும் இரண்டு படங்களும் 200 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்துள்ளன. சர்வதேச அளவில் இந்தப் படங்கள் இரண்டுமே விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு தொடர்ந்து மாஸ் படங்களை கொடுத்து வருகிறார்.

வசூல்மழையில் வாரிசு படம்

வசூல்மழையில் வாரிசு படம்

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியானது வாரிசு. அஜித்தின் துணிவு படத்துடன் மோதிய வாரிசு படம் வெளியான சில தினங்கள் பின்னடைவை சந்தித்த போதிலும் சுதாரித்துக் கொண்டது. தொடர்ந்து வசூல்மழை பொழிந்து வருகிறது.

ரூ.250 கோடி வசூல்

ரூ.250 கோடி வசூல்

சர்வதேச அளவில் கடந்த 11 நாட்களில் 250 கோடி ரூபாயை வாரிசு படம் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்துள்ளார். தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக வாரிசு படம் ஓடி வருவதால் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சலை முந்திய வாரிசு

மெர்சலை முந்திய வாரிசு

குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடி என பட்டையை கிளப்பியுள்ள வாரிசு படம் தமிழகத்தில் மட்டுமே 110 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. சர்வதேச அளவில் 250 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ள வாரிசு படம், முன்னதாக வெளியான மெர்சல் படத்தின் வசூலை முறியடித்துள்ளது.

250 கோடி ரூபாய் கிளப்பில் 4 படங்கள்

250 கோடி ரூபாய் கிளப்பில் 4 படங்கள்

இதன்மூலம் விஜய்யின் 4 படங்கள் அடுத்தடுத்து 250 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளன. தற்போது விஜய் நடிப்பில் தளபதி 67 படத்தின் சூட்டிங் துவங்கி கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ள நிலையில், விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை இந்தப் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X