Don't Miss!
- News
5 நாட்களில் 13,000 பேர் பலி.. சீனாவில் கோராத்தாண்டவமாடும் கொரோனா.. பலி மேலும் அதிகரிக்குமாம்
- Automobiles
விலை இவ்வளவு கம்மி தானா! ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்!
- Technology
Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வினோதமான காரணத்துக்காக காதலிப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
ப்பா.. எவ்ளோ க்யூட்டா இருக்காரு விஜய்.. என்னம்மா டான்ஸ் ஆடுறாரு.. வெளியானது Celebration of Varisu!
சென்னை: வாரிசு படத்தின் Celebration of Varisu பாடல் லிரிக் வீடியோவை சற்று முன் வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுத்துள்ளது ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதியே வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நடிகர் விஜய் ஒன் மேன் ஆர்மியாக படத்தை காப்பாற்றி உள்ளார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் வாரிசு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வந்தாலும் வசூலில் அனைத்து இடங்களிலும் நம்பர் ஒன்னாக மாறி உள்ளார் நடிகர் விஜய்.
வாரிசு
படத்தை
விமர்சித்த
இஸ்லாமிய
பெண்ணுக்கு
மிரட்டலா?ஏன்
திடீர்
மன்னிப்பு..
இயக்குநர்
நவீன்
ட்வீட்!

வாரிசுக்கு டஃப் கொடுத்த துணிவு
வாரிசு மற்றும் துணிவு இரு படங்களுமே இந்த பொங்கலுக்கு வெளியாகி உள்ளன. அஜித்தின் துணிவு திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் உள்ள வங்கி மோசடி கருத்து பலரையும் கனெக்ட் செய்துள்ளது. அதன் காரணமாக வாரிசு படத்துக்கு வசூலில் கடும் டஃப் கொடுத்து வருகிறது துணிவு. முதல் நாளில் தமிழ்நாட்டில் வசூலில் முந்திய துணிவு திரைப்படம் 2ம் நாள் வாரிசு படத்தை விட சற்றே குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.

மாயாஜால் அறிவிப்பு
சென்னையை சேர்ந்த பிரபல மல்டிபிளக்ஸ் தியேட்டரான மாயாஜாலில் இதுவரை வாரிசு திரைப்படம் தான் வசூலில் முதலிடத்தில் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையே வெளியிட்டு விட்டனர். அதே போல தமிழ்நாட்டின் பிரபல தியேட்டர்கள் எல்லாம் வாரிசு அதிக வசூல் செய்ததா? துணிவு அதிக வசூல் செய்ததா என அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.

பொங்கலுக்கு கவர
வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் முதல் நாளை விட இரண்டாம் நாளில் வசூலில் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை முதல் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை என்பதால் இந்த பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வரும் யுக்தியாக தற்போது வாரிசு படத்தின் Celebration of Varisu பாடலின் லிரிக் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செம க்யூட்
நாயகி ராஷ்மிகா மந்தனாவின் மேக்கப் சரியில்லையா? என்னவென்று தெரியவில்லை. அவரை விட செம க்யூட்டாகவும் அழகாகவும் நடிகர் விஜய் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தற்போது வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராஷ்மிகாவை பிடித்து தள்ளிவிட்டு
குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் விஜய் அம்மாவை பார்த்து விட்டு ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவை இடித்து தள்ளும் காட்சிகளும் அதன் பின்னர் நடிகர் விஜய்யை ராஷ்மிகா பின்னால் செல்லமாக தட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதன் பின்னர் நாயகி கையையும் அம்மாவின் கையையும் கோர்த்துக் கொண்டு நடைபோட்டும் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

செம டான்ஸ்
ஷோபி மாஸ்டர் கொரியோகிராஃபியில் நடிகர் விஜய் இன்னாம்மா டான்ஸ் ஆடுறாரு என ரசிகர்கள் லிரிக் வீடியோவுக்கு நடுவே வரும் ரியல் பாடல் வீடியோவையும் நடிகர் விஜய்யின் நடனத்தையும் கரிஷ்மாவையும் பார்த்து கொண்டாடி வருகின்றனர். கிங் ஆஃப் டான்ஸ், சோ க்யூட் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.