வாரிசு படத்தில் விஜய்யோட மாஸ் டான்ஸ்.. யாருமே கூட ஆடாம இருக்க முடியாது.. ஜானி மாஸ்டர் உற்சாகம்!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில தினங்களில் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் படத்தின் டூயட் காட்சிகள் படம் பிடிக்கப்பட உள்ளது.

படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு நடித்து வருகிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வரும் சூழலில் படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார்.

எண்ணூரில் நடந்த பைட் சீன்கள்

எண்ணூரில் நடந்த பைட் சீன்கள்

படத்தில் பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் போனற் இடங்களில் விறுவிறுப்பாக சூட்டிங் நடத்தப்பட்டது. படத்தின் பைட் சீன்கள் கடந்த வாரத்தில் எண்ணூரில் நடத்தப்பட்டன.

லீக்கான படத்தின் காட்சிகள்

லீக்கான படத்தின் காட்சிகள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் காட்சிகள் அவ்வப்போது லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுதது சூட்டிங்கின்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகர் விஜய்யின் சண்டை காட்சிகள் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை அளித்தன.

17ம் தேதி டூயட் சூட்டிங்

17ம் தேதி டூயட் சூட்டிங்

இதனிடையே வாரிசு படத்தின் பாடல் காட்சிகள் தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு வரும் 17ம் தேதி முதல் சூட்டிங் நடத்தப்பட உள்ளன. இதையடுத்து இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே சூட்டிங் மீதமுள்ளதாகவும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளன. இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்படவுள்ளன.

 விஜய்யின் மாஸ் டான்ஸ்

விஜய்யின் மாஸ் டான்ஸ்

இதனிடையே இந்தப் படத்தின் பாடல் ஒன்றில் நடிகர் விஜய்யின் மாஸான நடனத்தை காண தற்போதே ரசிகர்கள் தயாராகும்படி ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார். இந்த நடனத்தை திரையரங்குகளில் பார்க்கும் யாரும் கூட இணைந்து நடனமாடாமல் திரையரங்குகளில் சும்மா உட்கார முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

இந்தப் பொங்கலில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது. இது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ரசிகர்கள் தற்போது முதலே காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X