இது பக்கா தமிழ் படம்பா.. வாரிசு இயக்குநர் அப்டேட்!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ள நிலையில், அஜித்தின் துணிவு படத்துடன் பொங்கல் ரேசில் பங்கேற்கவுள்ளது.

நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யின் இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக தெலுங்கு பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் சூட்டிங் முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அஜித்துடன் மோதும் விஜய்

அஜித்துடன் மோதும் விஜய்

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. அதேநேரத்தில் அஜித்தின் துணிவு படமும் ரிலீசாகவுள்ள நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

குடும்ப சென்டிமெண்ட் படம்

குடும்ப சென்டிமெண்ட் படம்

இதனிடையே வாரிசு படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யின் தோற்றம் மற்றும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளன. படத்தில் மிகவும் இளமையான விஜய்யை பார்க்க முடிகிறது. தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் போஸ்டரும் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

வம்சி படிப்பள்ளி பேட்டி

வம்சி படிப்பள்ளி பேட்டி

இதனிடையே இந்தப் படத்தின் இயக்குநர் வம்சி படிப்பள்ளி விஜய் குறித்த பல்வேறு விஷயங்களை பிரபல வாரயிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை தெலுங்குப்பட இயக்குநர் இயக்கியுள்ள நிலையில், படம் ரசிகர்களுக்கு எந்தமாதிரியான அனுபவத்தை கொடுக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

பக்கா தமிழ்ப்படம்

பக்கா தமிழ்ப்படம்

இதனிடையே இந்தப் படம் பக்கா தமிழ்ப்படம் என்று வம்சி படிப்பள்ளி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். மெர்சல் படம் ஒரு மாதிரியான அனுபவத்தை கொடுத்த நிலையில், வாரிசு படம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகியிருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தும் படத்தில் இருக்கும் என்றும் வம்சி குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகா பேவரிட் ஹீரோ

ராஷ்மிகா பேவரிட் ஹீரோ

இந்தப் படத்திற்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனாவிடம் பேசிய தான் அவரது பேவரிட் ஹீரோ யார் என்று கேட்டதாகவும், அவர் சிறிதும் யோசிக்காமல் விஜய்யின் பெயரை கூறியதாகவும் வம்சி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் முந்தைய நாள் இரவு விஜய் தன்னை தயார் படுத்திக் கொண்டதாகவும், காட்சிக்கு முன்னதாக அவர் வழக்கமாக ரிகர்சல் செய்வார் என்றும் வம்சி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அடுத்தப் படத்திலும் கூட்டணி

அடுத்தப் படத்திலும் கூட்டணி

இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு வேறு லெவல் அனுபவத்தை கொடுக்கும் என்றும் தமன் இந்தப் படத்திற்காக எவ்வளவு உழைத்துள்ளார் என்பது அதில் தெரியும் என்றும் வம்சி மேலும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தப் படம் தயாரிப்பாளர் தில் ராஜுவை அதிகளவில் கவர்ந்துள்ளதாகவும் அடுத்தப்படத்தையும் அவர் தன்னை வைத்துதான் தயாரிக்கவுள்ளதாக தன்னிடம் பாராட்டு தெரிவித்ததாகவும் வம்சி குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X