முதல்ல பைட்டு.. அப்புறம்தான் டூயட்.. வாரிசு படத்தில் விஜய்யின் மாஸ்டர் பிளான்!
சென்னை : நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் இணைந்து விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
பொங்கலையொட்டி படம் ரிலீசாகவுள்ளதால் இம்மாதத்திற்குள் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தில் ஆக்ஷன், காமெடிக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் அடுத்தடுத்த மாஸ் படங்களை கொடுத்து தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது சமீபத்திய படம் பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை கொடுத்தாலும் விஜய்க்காகவே படத்தை கொண்டாடினார்கள்.

வாரிசு படத்தில் விஜய்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் 66வது படமாக வாரிசு படம் தற்போது முழுவீச்சில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, குஷ்பூ, ஜெயசுதா உள்ளிட்டவர்களும் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

பொங்கல் ரிலீஸ்
பொங்கலையொட்டி படம் ரிலீசாகவுள்ள சூழலில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்காகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பைட் காட்சிகள், மருத்துவமனை காட்சிகள் உள்ளிட்டவை வெளியாகின.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ்
இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை படக்குழு பலப்படுத்தியுள்ளது. பொங்கலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொண்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

எண்ணூரில் பைட் காட்சிகள் சூட்டிங்
இதனிடையே தற்போது எண்ணூரில் படத்தின் பைட் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கோகுலம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் அமைத்து டூயட் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஏறக்குறைய படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தளபதி 67ல் விஜய்
வாரிசு படத்தில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்துவரும் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணையவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்ற போதிலும் இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக உள்ளது. இம்மாத இறுதியில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் விஜய் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











