விஜய் படத்தோட டைட்டில் சிங்கிள் ரெடி.. யாரு பாடியிருக்காங்க தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் தன்னுடைய 66வது படத்தில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட சூட்டிங் மீண்டும் சென்னை அல்லது ஐதராபாத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் வாரிசு

விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தமிழில் தோழா படத்தை கொடுத்த இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தின்மூலம் பேமிலி சென்டிமெண்ட் படத்தில் நடித்து வருகிறார்.

தோழா படம்

தோழா படம்

கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான தோழா படம் ரசிகர்களுக்கு சிறப்பான படமாக அமைந்தது. அதுபோன்ற சுட்டியான கேரக்டரில் விஜய்யை நினைத்து பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது. மேலும் அவர் இந்தப் படத்தில் இரட்டை கெட்டப்புகளில் நடித்துவருவதும் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

வெளியானது போஸ்டர்கள்

வெளியானது போஸ்டர்கள்

படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாகியுள்ளார். அவருக்கும் இந்தப் படத்தில் மிகவும் வெயிட்டான கேரக்டர் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டைட்டில் கடந்த மாதம் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.

நிறைவு கட்டத்தை எட்டிய வாரிசு

நிறைவு கட்டத்தை எட்டிய வாரிசு

படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக படத்தின் முதல் சிங்கிளை வெளியிடுவது குறித்து படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். படத்தின் இசையமைப்பாளர் இந்தப் பாடலை முடித்துவிட்டதாகவும் இந்தப் பாடலும் குட்டி ஸ்டோரி, ஜாலிலோ ஜிம்கானா போன்று ரசிகர்களை சிறப்பாக கவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விஜய் பாடிய பாடல்

விஜய் பாடிய பாடல்

இதேபோல இந்தப் பாடலை நடிகர் விஜய்தான் பாடியுள்ளாராம். சமீபத்தில் வெளியான வாரிசு படத்தின் இரண்டாவது லுக்கில் அவர் டிரக்கில் காய்கறிகளுடனும் சிறுவர்களுடனும் பயணம் செய்வது போல அமைந்தது. இந்நிலையில் அந்த சூழலில்தான் இந்தப் பாடலிலும் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பில் வாரிசு படம்

எதிர்பார்ப்பில் வாரிசு படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 67 படத்தில் விஜய் இணையவுள்ள நிலையில், முன்னதாக வெளியாகவுள்ள வாரிசு படம் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலகலப்பான காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என இந்தப் படத்தில் அனைத்தும் கலந்த கலவையில் விஜய் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X