மீண்டும் லீக்கான வாரிசு படத்தின் வீடியோ.. இந்தமுறை ஹாஸ்பிடல் சீன்.. அட ஸ்ட்ரெச்சர்ல யாரு சரத்குமாரா!

சென்னை : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம் என நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் வாரிசு.

விஜய்யின் 66வது படமாக உருவாகியுள்ள இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து பிரபல இயக்குநர் வம்சி படிப்பள்ளியால் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் காட்சிகள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து அடுத்ததாக ஹிட் படத்தை கொடுப்பார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே அவரது 66வது படமாக வாரிசு படம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் என நடத்தப்பட்ட நிலையில் தற்போது 4வது கட்டமாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

குடும்ப சென்டிமெண்ட் படம்

குடும்ப சென்டிமெண்ட் படம்

இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார். ஆனால் விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடியும் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் முதல் மற்றும் டைட்டில் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். விஜய்யின் பிறந்தநாளையொட்டி டைட்டில், போஸ்டர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ட்ரெயிலர்?

விரைவில் ட்ரெயிலர்?

அடுத்ததாக பாடல் அல்லது ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக தமன் உள்ளிட்ட படக்குழுவினர் அப்டேட் கூறி வருகின்றனர். சென்னை, ஐதராபாத்தை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் தற்போது படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பல ஸ்டில்கள், வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

தொடர்ந்து லீக்காகும் காட்சிகள்

தொடர்ந்து லீக்காகும் காட்சிகள்

அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சில புகைப்படங்கள் வெளியாகின ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதையடுத்து சூட்டிங் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பைட் சீன் லீக்

பைட் சீன் லீக்

கடந்த வாரத்தில் இந்தப் படத்தின் பைட் சீன் காட்சிகள் வெளியாகின. அதில் விஜய் மற்றும் ஷாம் காணப்பட்டனர். விஜய்க்கு ஆதரவாக ஷாம் சண்டையிட்ட நிலையில் அவர் விஜய்யின் சகோதரரா என்று ரசிகர்கள் யோசித்தனர். இந்நிலையில் தற்போது ஹாஸ்பிடல் சீன் ஒன்று வெளியாகியுள்ளது.

மருத்துவமனை சீன் லீக்

மருத்துவமனை சீன் லீக்

அதில் பிரபு டாக்டராக காணப்படுகிறார். ஸ்ட்ரெச்சரில் வைத்து சரத்குமாரை விஜய் தள்ளிக் கொண்டு வருவதுபோலவும் மிகவும் வருத்தமாக அவர் காணப்படுவதும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. மற்ற வீடியோக்களாவது சரியாக கிளாரிட்டி இல்லாமல் இருந்தது.

தெளிவான வீடியோ லீக்

தெளிவான வீடியோ லீக்

ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மிகவும் தெளிவாக காணப்படுகிறது. படத்தில் சரத்குமார் விஜய்யின் அப்பாவாக நடித்துவருவதாக கூறப்படும் நிலையில், அவருக்கு என்ன உடல்நிலை கோளாறு, ஏன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். வீட்டில் ஏற்படும் பிரச்சினையால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாரா என்பதுபோல பல கேள்விகளை இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.

படத்திற்கான எதிர்பார்ப்பு

படத்திற்கான எதிர்பார்ப்பு

படம் வெளியாவதற்கு முன்னதாகவே இத்தகைய வீடியோக்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. இதுவே படத்திற்கான பிரமோஷனாகவும் அமைந்துள்ளது. படத்தில் விஜய்யின் கெட்டப்பும் சிறப்பாக காணப்படுகிறது. சமீபத்தில் விசாகப்பட்டினம் செல்வதற்காக இவர் விமான நிலையத்தில் இதே கெட்டப்பில்தான் காணப்பட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X