Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Varisu Movie Release Live: ஆட்ட நாயகன் விஜய்யின் ஆட்டம் ஸ்டார்ட்.. வாரிசு விமர்சனம் இதோ!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி வெளியான நிலையில், நள்ளிரவில் இருந்தே விஜய் ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாவாக மாற்றி உள்ளனர்.
தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை காண அதிகாலையிலேயே ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.
துணிவு மற்றும் வாரிசு என இரு படங்களும் இன்று வெளியாகி உள்ள நிலையில், தியேட்டர்களில் இப்போதே பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆகி விட்டது.

வாரிசு - வருத்தம்
விஜய்யின் வாரிசு படத்தை பார்த்த சினிமா விமர்சகர் கிறிஸ்டோபர் கனகராஜ் “வாரிசு - வருத்தம்” என பதிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இன்று வெளியான இரு படங்களுமே சுமார் தான் என அவர் பதிவிட்டுள்ளார்.
வாரிசு பொதுமக்கள் கருத்து
தொழில் போட்டிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் திரைப்படம் வாரிசு. விஜய்யின் மிரட்டலான நடனத்திற்காகவே படத்தை பார்க்கலாம், குறிப்பாக ரஞ்சிதமே ரஞ்சிதாமே பாடலில் கடைசி நிமிடங்களில் சிங்கிள் ஷாட் அரங்கையே ஆட்டம் போடவைத்துவிட்டது.
திரைக்கதை மற்றும் வசனத்துக்கு உதவிய விவேக்
பாடலாசிரியர் விவேக் வாரிசு படத்திற்கு வெறும் பாடல்களை மட்டும் எழுதாமல் அந்த படத்தின் எழுத்துப் பணிகளிலும் தன்னை அர்பணித்துக் கொண்டது படத்திற்கு பெரிதும் உதவி உள்ளது. விவேக்கிற்குள் ஒரு இயக்குநர் இருக்கிறார் என விஜய் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ரத்னகுமார் விமர்சனம்!
தளபதி ஆல் சென்டர் அதகளம்.. திரையில் நடிகர் விஜய் செய்யும் அனைத்துமே ஒரு மேஜிக்காக உள்ளது. இயக்குனர் கார்டு வரும் போது கைதட்டல்கள் கிடைத்த நிலையிலேயே வம்சி வென்று விட்டார். உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படம் வாரிசு என ஆடை, குலுகுலு படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
#Varisu Thalapathy"s All center Adhagalam 😍😍🔥🔥🔥💥. Whatever he does on screen works like a charm❤️💫.Getting Applause for a director card proves @directorvamshi sir's mettle. Congrats sir👌🙏.You declared, & delivered a genuine Kudumbangal kondaadum Vetri👏👍. BLOCKBUSTER💥 pic.twitter.com/Lv43JDJIoj
— Rathna kumar (@MrRathna) January 11, 2023
முதல் பாதியை விட 2ம் பாதி சூப்பர்!
வாரிசு படத்தின் முதல் பாதியை விட பாஸ் ஆக மாறிய பின்னர் விஜய் ஆடும் கேம் தான் சிறப்பாக உள்ளது. ரஞ்சிதமே பாடலின் கடைசி 1 நிமிட நடனம் வேறலெவல் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
#Varisu 2nd Half is Better than 1st Half..👌
— Laxmi Kanth (@iammoviebuff007) January 11, 2023
- #ThalapathyVijay's Screen presence..🔥
- Thaman's BGM Elevates Emotion and action scenes🤝
- Thalapathy in Board Room scene & Pre Climax 🔥
- Ranjithame Vibe👌
- Climax Emotion works 👍
- A Worth Watchable Family Entertainer..⭐
ரமேஷ் பாலா ட்வீட்
அஜித்துக்கு சாதகமாக பாக்ஸ் ஆபிஸ் ட்வீட்களை போட்டு வருபவர் ரமேஷ் பாலா என சொல்லப்பட்டு வரும் நிலையில், வாரிசு படத்தை பார்த்து விட்டு ஒன் மேன் ஷோ வாரிசு திரைப்படம் என விமர்சித்து 3.25 ரேட்டிங்கையும் கொடுத்து நடிகர் விஜய்யின் கரிஷ்மாவை வெகுவாக பாராட்டி உள்ளார். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டருக்கு போகும் ரசிகர்களை இந்த முறை வாரிசு படம் ஏமாற்றாது என்பது மட்டும் நிச்சயம்.
#Varisu [3.25/5] : One Man Show.. Works mainly due to #Thalapathy @actorvijay 's charisma and screen presence..
— Ramesh Bala (@rameshlaus) January 10, 2023
Has all the ingredients of a Family Entertainer..
Will work with Family audience and #Thalapathy fans.. 👍
மெட்டி ஒலி ரெஃபரன்ஸ்
வாரிசு படம் ஆக்ஷன் என்டர்டெயினராக இந்த முறை வெளியாகாமல் குடும்பம் மொத்தமும் சேர்ந்து பார்க்கக் கூடிய எமோஷனல் படமாக உருவாகி உள்ளது. ஆனால், நடிகர் விஜய்யின் பர்ஃபார்மன்ஸ் வேறலெவல் வெறித்தனம் என அபிஷேக் ராஜா விமர்சித்துள்ளார். ரப்பர் பேண்ட் போல வளையும் விஜய்யின் உடம்பு மற்றும் ட்ரோல் பண்றவங்களுக்கு இந்தா வச்சிக்கோ மெட்டி ஒலி ரெஃபரன்ஸ் என படம் வெயிட்டு காட்டுகிறது என ஏகப்பட்ட ட்வீட்களை போட்டுள்ளார்.
Dependency on the template is understandable but it is @actorvijay and his histrionics that creates the stir 💥#Varisu
— S Abishek Raaja (@cinemapayyan) January 10, 2023

‘வாரிசு வெற்றியடைய வாழ்த்துகள்’ - சரத்குமார் ட்வீட்!
வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சாந்தனு வாழ்த்து!
அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இரு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். விரைவில் சென்னை வந்ததும் பெரிய திரையில் இரு படங்களையும் கண்டு ரசிக்க ஆவலாக உள்ளேன் என நடிகர் சாந்தனு பாக்கியராஜ் ட்வீட் போட்டுள்ளார்.
Best wishes to @actorvijay Anna and #Ajit sir for #Varisu and #Thunivu releasing today 🎉
— ஷாந்தனு- இராவண கோட்டம் (@imKBRshanthnu) January 11, 2023
Praying both films to be
blockbusters💛 Waiting to come back to chennai to watch both films on the big screen 💛 pic.twitter.com/bNvJ8fPbs4
காலரை தூக்கி கெத்துக்காட்டிய தில் ராஜு
வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் தனது காலரை தூக்கி கெத்துக் காட்டிய வீடியோ டிரெண்டாகி வருகிறது. வாரிசு படத்தின் ரிசல்ட்ஸ் தயாரிப்பாளரை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.
Dil Raju Sambhavam 🔥🔥🔥#VarisuFDFS #BlockBusterVarisu
— Harish N S (@Harish_NS149) January 11, 2023
pic.twitter.com/tGGRJiZW1b
சரத்குமார் ட்வீட்
தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார அறுவடைத் திருநாளாம் தைத்திருநாளை குடும்பங்களுடன் மகிழ்வுடன் கொண்டாட, திரையரங்கில் இன்று வெளியாகி உள்ள வாரிசு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய நல்வாழ்த்துகள்
தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார அறுவடைத் திருநாளாம் தைத்திருநாளை குடும்பங்களுடன் மகிழ்வுடன் கொண்டாட, திரையரங்கில் இன்று வெளியாகும் #வாரிசு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய நல்வாழ்த்துகள் #Varisu #Thalapathy @actorvijay @realsarathkumar @directorvamshi @SVC_official @MusicThaman pic.twitter.com/7CFCfdKsrc
— R Sarath Kumar (@realsarathkumar) January 10, 2023
தளபதி என்ட்ரி
டிராவலராக தளபதி விஜய்யின் மாஸ் என்ட்ரி வாரிசு படத்தில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இயற்கை சூழலையும் அருவியையும் நடிகர் விஜய் ரசித்தப்படி திரும்பும் காட்சியை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
#varisu #VarisuPongal2023 #ThalapathyVijay #VarisuFDFS #VarisuPremiere #Thunivu #ThunivuFDFS
— Cool_boy_5zoo (@cool_boy_5zoo) January 11, 2023
Thalapathy entry with the adv bike and as a traveller was 🔥
First half done
Intermission BGM on fire🔥🔥 pic.twitter.com/mrD8Tpnbmh