Don't Miss!
- News
ரூமில் அமர்ந்திருந்தால் வேலைக்கு ஆகாது! ஸ்பாட் ரிப்போர்ட் என்ன? நேரடியாக களமிறங்கும் ஸ்டாலின்!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Finance
1000 பேரை கொத்தாகப் பணிநீக்கம் செய்தும் நிறுவனம்.. ஊழியர்கள் பீதி..!
- Lifestyle
உங்க கொழுப்பை குறைத்து...உடல் எடையை சீக்கிரம் குறைக்க நீங்க இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா போதுமாம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வாரிசு படம் பாப்பீங்களா.. இல்ல துணிவா..மழுப்பலாக பதிலளித்த வடிவேலு!
சென்னை : திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வடிவேலுவிடம் வாரிசு படம் பாப்பீங்களா.. இல்ல துணிவு படம் பாப்பீங்களா என் செய்தியாளர்கள் கேள்வி கேட்க மழுப்பலாக பதிலளித்தார்.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும்,அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
இரண்டு பெரிய நடிகர்களின் படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரும் இணையத்தில் மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
சோலோவா அத்தனை தியேட்டரில் வெளியாகியும் வலிமை நிலைமை இதுதான்.. அப்போ துணிவு.. வாரிசை வெல்லுமா?

வாரிசு
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ந் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள படத்தில் ராஷ்மிகா,சரத்குமார்,பிரகாஷ் ராஜ், சங்கீதா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

பாட்டு பாடி அசத்திய விஜய்
இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை பாடி அசத்தினார். பாட்டு பாடியது மட்டும் இல்லாமல் அந்த பாடலுக்கு மாஸாக நடனமும் ஆடி இருந்தார். அவர் நடனம் ஆடிய வீடியோவை இணையத்தில் அவரது ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

நடிகர் வடிவேலு
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த வடிவேலு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருச்செந்தூர் முருகன் கோவில் எனக்கு பிடித்தமான கோவில், பல கோயில்கள் இருந்தாலும் இந்த கோவிலுக்கு வந்து முருகனை தரிசிக்கும் போது மனதிற்கு அமைதி கிடைக்கும். உங்களுக்கு எந்த மனக்குறை இருந்தாலும் இங்கு வந்து முருகனை ஒருமுறை தரிசனம் செய்யுங்கள், நிச்சயம் உங்கள் மனக்குறை நீங்கும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்றார்.

வாரிசா...துணிவா
இதையடுத்து, செய்தியாளர்கள் பொங்கலுக்கு வெளியாக இருக்கு வாரிசு மற்றும் துணிவு இதில் எந்த படத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்று கேட்டனர். அது பற்றி எனக்கு தெரியவில்லையே என சிரித்துக்கொண்டே பதிலளித்த வடிவேலு, வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும். சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்றார்.

அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறேன்
என்னுடன் யார் நடிக்க வருகிறார்களோ அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டியதுதான். அடுத்ததாக மாமன்னன், சந்திரமுகி-2, விஜய் சேதுபதியின் புதிய படம் என நிறைய படங்களில் நடித்து வருகிறேன். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிகரமாக 3ஆவது வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக வாழ்த்தினார்கள் என்றார்.