விஜய் செம யங்.. அவரோட வாய்ஸோ சூப்பர் "ஐஸி".. குட்டி ஸ்டோரி பாட்டை கவனிச்சீங்களா!

Recommended Video

Master - Kutti Story | Lokesh Kanagaraj | Anirudh Ravichandran | Thalapathy Vijay

சென்னை: மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி, இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

வட இந்தியாவிலும், தனது ஆளுமையை செலுத்த நினைத்துள்ள நடிகர் விஜய், அதிக அளவிலான ஆங்கில வார்த்தையை இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

பிகில் திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடலை விட இந்த பாடலில் அவரது குரல் மிகவும் இளமையாக உள்ளது.

எப்பவுமே ஹிட்டு தான்

எப்பவுமே ஹிட்டு தான்

தளபதி விஜய் எப்போது தனது படங்களில் பாடல் பாடினாலும், அந்த பாடல் வேற லெவல் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆங்கில வரிகள் கலந்து, வெளியாகி இருக்கும் இந்த தத்துவ பாடல், நிச்சயம் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பவே, விஜய் ரசிகர்களுக்கு, பாடல் மிகவும் பிடித்துப் போய் கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு பிடிக்கும்

குழந்தைகளுக்கு பிடிக்கும்

சிம்டாங்காரான் பாடல் வரிகளை பலரும் ஆரம்பத்தில் கலாய்த்து வந்த போது, குழந்தைகள் அந்த பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்து, மிகப்பெரிய ஹிட்டானது. அதுபோல, கார்ட்டூன் கதாபாத்திரத்தில் விஜய், லிரிக்ஸ் வீடியோவில் வருவது, நிச்சயம் குழந்தைகளை மிகப்பெரிய அளவில் கவரும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரொம்ப யங்

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய், மீசை இல்லாமல் இளம் வேடத்தில் நடித்துள்ளார் என்ற தகவல்கள் சமீபத்தில் கசிந்திருந்தன. அதில், எந்தளவு உண்மை இருக்கிறது என்பது, படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியானால் தான் தெரியும். ஆனால், குட்டி ஸ்டோரி பாடலில் விஜய்யின் குரல் செம்ம யங்கா இருக்கிறது.

மாஸ்டர் செல்ஃபி

மாஸ்டர் செல்ஃபி

அதுமட்டுமின்றி, வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு, நெய்வேலியில் கூடிய ரசிகர்களும், நடிகர் விஜய் எடுத்த மாஸ்டர் செல்ஃபி புகைப்பட காட்சியையும் அனிமேஷன் வீடியோவாக மாற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. #KuttiStory, #OruKuttyKathai #KuttiKathai என மூன்று ஹாஷ்டேக்குகள் உருவாக்கி விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

காதலர் தினம் vs குட்டி ஸ்டோரி

காதலர் தினம் vs குட்டி ஸ்டோரி

காதலர் தினமான இன்று மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி உள்ளது. காதலர் தினத்தையே மறக்கடிக்கும் வகையில், அதன் ஹாஷ்டேக்குகளை தாண்டி குட்டி ஸ்டோரி ஹாஷ்டேக்குகளை வழக்கம் போல் தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X