சங்கீதாவை பற்றி அப்படி சொல்லாதீங்க.. விஜய்க்கு கண்டிஷன் போட்ட பிரபலம்.. சீனாவில் நடந்தது தெரியுமா?
சென்னை: இளைய தளபதியாக திரைத்துறையில் பயணத்தை ஆரம்பித்து இப்போது தளபதியாக உயர்ந்திருக்கும் விஜய்; கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். ஜேசன் இப்போது சிக்மா படத்தை இயக்கியிருக்கிறார். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான விஜய்; இன்று தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். திரையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர்; சில வருடங்களுக்கு முன்பிருந்து அரசியல் கட்சியும் தொடங்கிவிட்டார். அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அவரது தவெக கட்சி போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் ஜனநாயகன்: முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த நேரம் வேண்டும் என்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்கவும் செய்கிறார் அவர். எனவே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதுதான் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால்; பட ரிலீஸை திருவிழா போல் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிவருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

இசை வெளியீட்டு விழா: அதேபோல் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவிருக்கிறது. ஒரு லட்சம் பேர்வரை அமரக்கூடிய புக்கீட் ஜலீல் மைதானத்தில் அந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக விஜய் தனது தாய் ஷோபா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோருடன் நேற்று மலேசியாவுக்கு சென்றடைந்தார். அதேபோல் நெல்சன் திலீப்குமார், அட்லீ, பிரபுதேவா உள்ளிட்டோரும், பின்னணி பாடர்கள், பாடகிகள் என பலரும் தளபதி திருவிழாவில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சங்கீதா மிஸ்ஸிங்: எத்தனை பேர் இந்த தளபதி திருவிழாவிலும் கலந்துகொண்டாலும்; அனைவரும் எதிர்பார்த்தது விஜய்யின் மனைவி சங்கீதாவைத்தான். ஆனால் இப்போதுவரை மலேசியாவுக்கு அவர் செல்லவில்லை என்றே தெரிகிறது. தளபதியின் கடைசி இசை வெளியீட்டு விழாவுக்கு நிச்சயம் சங்கீதா வந்திருக்கலாமே என்று விஜய்யின் ரசிகர்களும் கூறிவருகிறார்கள். அதேசமயம் தவிர்க்க முடியாத காரணங்களால்தான் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கும் என்றும் சொல்லி மனதை தேற்றிக்கொள்கிறார்கள்.
ரேக்ஸ் பேட்டி: இந்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு சப் டைட்டில் வேலை பார்த்திருக்கும் ரேக்ஸ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "ஜனநாயகன் படத்துக்கு சப் டைட்டில் வேலை எல்லாம் முடிந்துவிட்டது. இது விஜய்க்கு நான் செய்யும் 14ஆவது படம் ஆகும். காவலன் படத்திலிருந்து அவருடைய படங்களில் வேலை செய்துவருகிறேன். அவர் ரொம்பவே ரிசர்வ் டைப்தான். ஆனாலும் சென்ஸ் ஆஃப் ஹியூமர் நிறைய உடையவர்.
அப்படி சொல்லாதீங்க: ஒருமுறை சீனாவுக்கு நான், விஜய், எனது கணவர், மகள் சென்றிருந்தோம். அப்போது ஒரு சொகுசு கப்பலுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம். அந்த பேச்சின்போது அவர் என்னிடம், சங்கீதாதான் எனது Better Half என்று கூறினார். உடனே நான், 'பெட்டர் ஹாஃப் என சொல்லாதீர்கள். ஈக்வல் ஹாஃப் என சொல்லுங்கள். உங்களுக்கு அவங்க சரிபாதிதான்' என சொன்னேன். சரி என்று தலையாட்டிக்கொண்டார். கொஞ்ச நேரத்தில் எனது கணவர் எங்கேயோ சென்றுவிட்டார். அதற்கு விஜய் என்னிடம், 'போங்கள். உங்கள் ஈக்வல் ஹாஃபை தேடி கண்டுபிடியுங்கள்' என டைமிங்கில் சொன்னார். இப்படி அவரிடம் இருக்கும் ஹியூமர் சென்ஸ் எனக்கு பிடிக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











