நாளைக்கு பிரியாணினு சொன்னா போதும் அவர் இதைத்தான் செய்வார்.. விஜய் மனைவி பகிர்ந்த சுவாரஸ்யம்
சென்னை: நடிகர் விஜய்யின் உணவு பழக்கம் குறித்து அவரது மனைவி சங்கீதா பேசும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய சினிமாவில் மிகப்பெரிய வியாபாரம் உடைய ஹீரோக்களில் விஜய்யும் ஒருவர். நடனம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்து ஜானரிலும் தனது அடையாளத்தை ஆழமாக பதித்தவர் விஜய். ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுகிறார்.

கலவையான விமர்சனங்களை பெற்ற வாரிசு
விஜய் கடைசியாக வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக உருவான அந்தப் படத்தில் விஜய்யுடன் ஷாம், சரத்குமார், பிரபு, சங்கீதா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தெலுங்கில் தனது மார்க்கெட்டை உயர்த்துவதற்காகத்தான் விஜய் பைலிங்குவல் படத்தில் நடித்தார் என கூறப்பட்டது. ஆனால் தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி வாரிசு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

லோகேஷுடன் மீண்டும் விஜய்
வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனங்களை விஜய் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இதற்கு முன்னதாக அவர் நடித்த பீஸ்ட் படமும் தோல்வியை சந்திக்க வாரிசு படம் தனக்கு ஏற்பட்ட இரண்டாவது சறுக்கலாகவே பார்க்கிறார் விஜய். எனவே அடுத்து ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் தற்போது நடித்துவருகிறார் விஜய்.

காஷ்மீரில் முடிந்தது லியோ ஷூட்டிங்
லோகேஷ் கனகராஜ் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் ஹிட்டாகியுள்ளன். எனவே இந்தப் படத்தின் மீதும் விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதற்கேற்றபடிதான் லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோவும் இருந்தது. படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. தற்போது விஜய் சென்னையில் குட்டி ரெஸ்ட்டில் இருக்கிறார். ரெஸ்ட்டை முடித்துவிட்டு சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் அவர், க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்துக்கு செல்லவிருக்கிறார்.

இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ
இந்நிலையில் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் தனது மனைவி சங்கீதாவை அறிமுகப்படுத்தும் அவர், சாப்பிட தயாராகிறார். ஆனால் ஹாட் பாக்ஸில் இட்லி இருக்க, என்னம்மா எனக்கு தோசை சாப்பிடணும் போல இருக்கு என கூற; மனைவி சங்கீதா தோசை ரெடி செய்யவா என கேட்கிறார். அதற்கு விஜய் இல்லை நானே தோசை சுடுறேன் என கூறி தோசை சுடுகிறார்.

நாளைக்கு பிரியாணினா விஜய் இதைத்தன் செய்வார்
மேலும் அந்த வீடியோவில் பேசும் சங்கீதா, "தோசைனா விரும்பி சாப்பிடுவார். பிரியாணினா நல்லா இறங்கும். நாளை மதிய உணவு பிரியாணி என சொன்னால் இன்று இரவிலிருந்தே அவரது வயிறு காலியாக இருக்கும்" என கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. லியோ படத்தை முடித்த பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











