சீமானுக்கு மூளை வளர்ச்சி குறைவு.. விஜய் பட இயக்குநர் போட்ட போஸ்ட்.. என்னங்க இப்படி சொல்லிட்டாரு!
சென்னை: பாலிவுட் சினிமாவைப்போல் தமிழ் சினிமா பிரபலங்கள் எப்போதும் இருந்ததில்லை. காரணம், சமகால அரசியல் சூழல் குறித்து தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்துதான் வந்துள்ளார்கள். மேலும் தமிழ் சினிமா உலகில் இருந்து பலர் நேரடியாக அரசியலில் களமிறங்கியுள்ளார்கள். அந்த வரிசையில் கடைசியாக களமிறங்கியவர் விஜய். நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மூளை வளர்ச்சி குறைவு என தனது எக்ஸ் பக்கத்தில் மீம் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள, சீமான் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து, சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். இது மட்டும் இல்லாமல், பல படங்களில் நடித்தும் உள்ளார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்குப் பின்னர், நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றார். தமிழக அரசியல் சூழலில் நரம்பு புடைக்க பேச்சாற்றல் கொண்ட அரசியல் தலைவர்களில் சீமானும் ஒருவராக உள்ளார்.

சீமானின் பேச்சாற்றல், தமிழ் இலக்கியங்களில் உள்ளவற்றை நெடிப்பொழுதில் உதாரணமாக கூறும் அவரது நினைவாற்றல் ஆகியவை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த அளவுக்கு பேசும் சீமான் மீது, அரசியல் தளத்தில் தொடங்கி, சமூக வலைதளங்கள் வரை பலரும் விமர்சனங்களை பல்வேறு வகைகளில் முன்வைத்துள்ளனர். அதற்கு காரணம் அவரது பேச்சினை அவரே மாற்றிப் பேசுவார் என்பது ஒரு காரணம் என்றால், தனது கட்சி நிர்வாகிகளை, மாற்றுக் கட்சியினரை ஒருமையில் பேசுவது மற்றொரு காரணம்.

ஜான் மகேந்திரன்: இதுமட்டும் இல்லாமல், அவர் மீது வைக்கப்படும் மிகப்பெரிய விமர்சனம், மாநில அரசின் அதிகாரங்கள் குறித்து சீமானுக்கு எதுவும் தெரியவில்லை என்பதுதான். இதுமட்டும் இல்லாமல், இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து அவர் பேசும்போது பல விஷயங்கள் நம்பத்தகுந்த வகையில் இல்லை என பலரும் விமர்சிக்கின்றனர். அப்படியான நிலையில் விஜய் நடிப்பில் உருவான சச்சின் படத்தின் இயக்குநரும், மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகனுமான ஜான் மகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் சீமானுக்கு மூளை வளர்ச்சி குறைவு எனக் கூறும் மீம் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இவர் இலங்கையில் போர் நடைபெற்றபோது, அங்கு சென்று பிரபாகரனோடு தங்கி இருந்தார்.
மூளை வளர்ச்சி: அதாவது, ஜான் மகேந்திரன் பகிர்ந்துள்ள வீடியோவில், சிமான் செய்தியாளர் சந்திப்பில் பேசும் வீடியோ உள்ளது. அந்த வீடியோவைத் தொடர்ந்து நாயகன் படத்தில் ஜனகராஜ் பேசும் வசனமான, "இது பொறந்ததுல இருந்தே இப்படித்தானாம்.. மூளை வளர்ச்சி குறைவாம்" எனப் பேசும் காட்சி சேர்க்கப்பட்டுள்ள, மீம் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்தாலும், இவரது இந்த வீடியோவுக்கு சீமானின் ஆதரவாளர்கள், ஜான் மகேந்திரனுக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர்.

கமெண்ட்: இது மட்டும் இல்லாமல், பலர் ஜான் மகேந்திரனின் கருத்துக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு இணையவாசி, நீங்கள் சீமானை விமர்சித்துவிட்டீர்கள் அல்லவா, நாளைக்கு உங்கள் தந்தைக்கே அவருதான் டைரக்ஷன் சொல்லிக்கொடுத்தேன் என கதை அளக்கப்போகின்றார் என கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











