நான் மாத்திக்கிறேன்.. பரவாயில்லை.. விஜய் சேதுபதிக்காக தியாகம் செய்த விஜய்.. தளபதி 64 அப்டேட்!
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் சேதுபதிக்காக நடிகர் விஜய் தளபதி 64 படத்தில் முக்கிய தியாகம் ஒன்றை செய்துள்ளார்.
தளபதி 64தான் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது.
மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படிபொதுவாக
பொதுவாக விஜய் படங்களின் ஷூட்டிங் போது வாரம் இரண்டு நாட்கள் விஜய் விடுமுறை எடுப்பார். அவசரமாக படம் எடுக்கிறார் என்றால், வாரம் ஒருநாள் விடுமுறை எடுப்பார். விடுமுறை இல்லாமல் விஜய் எப்போதும் பணியாற்றியது கிடையாது.

ஆனால் இல்லை
ஆனால் தற்போது தளபதி 64 படத்திற்காக விஜய் விடுமுறை இல்லாமல் நடிக்கிறார். ஆமாம் கிட்டத்தட்ட 40 நாட்கள் விஜய் எந்த விடுமுறையும் இல்லாமல் நடிக்கிறார். தளபதி 64 படத்திற்காக அவர் வரிசையாக கால் சீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இப்படி
இதற்கு விஜய் சேதுபதிதான் காரணமும் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி தளபதி 64 படத்தில் மிகப்பெரிய நெருக்கடிக்கு இடையில் நடிக்கிறார். தன்னுடைய படங்கள் பலவற்றை ஒத்திவைத்துவிட்டு அவர் தளபதி 64 படத்தில் நடிக்கிறார்.

நல்லது
விஜய் உடன் நடிக்க வேண்டும் என்பதற்காக அவர் இப்படி பல படங்களில் கொடுத்த கால்ஷீட்டை மாற்றி இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். இதனால் விஜயும் விஜய் சேதுபதி காட்சிகளை முதலில் முடித்து கொடுத்துவிடலாம் என்றுள்ளார். இதனால் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

லீவ் இல்லை
இதனால் விஜய் தன்னுடைய லீவ் அனைத்தையும் வேண்டாம் என்று கூறுகிறார்கள். விஜய் சேதுபதிக்காக லீவ் எடுக்காமல் நடித்து கொடுக்காமல் என்று விஜய் முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











