Vijay Samantha: "விஜய் சூப்பர் ஹீரோவா நடிக்கலாம்.. ஜோடி இவங்க தான்..” சமந்தாவுக்கு இப்படியொரு ஆசையா!
சென்னை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இந்நிலையில் விஜய் சூப்பர் ஹீரோவாக நடிக்கலாம் என சமந்தா கூறியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் விஜய்க்கு ஜோடியாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் சூப்பர் ஹீரோவாக நடிக்கலாம்
கோலிவுட் மட்டுமின்றி பான் இந்தியா ஜானரிலும் மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார் விஜய். அவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், விஜய்க்கு பாக்ஸ் ஆபிஸில் பெரிய சக்சஸ் கொடுத்துள்ளது.
இதனையடுத்து லியோ வெற்றி விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 68 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் விஜய். லியோ சக்சஸ் மீட் முடிந்த மறுநாளே தளபதி 68 படப்பிடிப்புக்காக தாய்லாந்து பறந்தார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மைக் மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் டைம் ட்ராவல் பின்னணியில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சூப்பர் ஹீரோவாக நடிக்கலாம் என நடிகை சமந்தா கொளுத்திப் போட்டுள்ளார். தி மார்வெல்ஸ் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் அவெஞ்சர்ஸ் அணியில் எந்த இந்திய நடிகர்கள் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சமந்தா, அவெஞ்சர்ஸ் படத்தில் விஜய், அல்லு அர்ஜுன், ஆலியா பட், ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். சமந்தாவின் இந்த பதில் விஜய் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. முன்பெல்லாம் காதல் பின்னணியில் அதிக படங்கள் நடித்து வந்த விஜய், இப்போது கேங்ஸ்டர் மோடுக்கு மாறிவிட்டார். இனி விரைவில் சூப்பர் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விஜய்யுடன் கத்தி, மெர்சல் படங்களில் ஜோடியாக நடித்துள்ளா சமந்தா, அதன்பின்னர் தளபதியுடன் ஜோடி சேரவில்லை. இந்நிலையில் விஜய் சூப்பர் ஹீரோவாக நடித்தால் அவருடன் ப்ரியங்கா சோப்ரா, ஆலியா பட் நடிக்கலாம் என கூறியதும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











