நானோ, சங்கீதாவோ என்ன செய்தாலும் குறையே சொல்லமாட்டார்.. விஜய் அம்மா உடைத்த டாப் சீக்ரெட்

சென்னை: விஜய்யும், சங்கீதாவும் மனஸ்தாபம் காரணமாக திருமண உறவை முறிக்கவிருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் பிரிவதாக முடிவெடுத்து பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

விஜய்யை திருமணம் செய்துகொண்ட சங்கீதா இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகவும் மாறினார். மேலும் தன் கணவருக்கு பல படங்களில் ஆடை வடிவமைப்பையும் அவரே செய்தார். இரண்டு பேரும் நல்லபடியாக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில்; திடீரென அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. எப்போதும் போன்ற சண்டைதான்; இது நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் குடும்பத்தினர் நினைத்தார்கள். ஆனால் நாளுக்கு நாள் அவர்களுக்கிடையேயான விரிசல் அதிகமாகி; திருமண உறவே உடையும் அளவுக்கு நிலைமை செல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

Vijay Sangeetha Sornalingam Divorce Buzz Shoba Chandrasekhar s Interview Trends
Photo Credit:

சங்கீதாவின் குற்றச்சாட்டுக்கள்: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கூறியதைவிடவும்; ஒரு நடிகையுடன் விஜய் தொடர்பில் இருக்கிறார் என்று அந்த மனுவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை பார்த்துதான் அனைவரும் அதிகம் அதிர்ச்சியடைந்தார்கள். விஜய் வீட்டுக்குள் இப்படிப்பட்டவரா? மனைவியை இவ்வளவு கொடுமை செய்திருக்கிறாரே என்று சரமாரியாக விமர்சித்தார்கள். மேலும் இந்த விஷயம் எல்லாம் தேர்தலில் எதிரொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும் பலர் சொன்னார்கள்.

ஜூன் 15ல் விசாரணை நடக்கிறது: சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் காணொலி மூலம் ஆஜராக அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பு கோரிக்கை வைத்திருக்கிறது. கண்டிப்பாக அன்றைய தினம் இரண்டு பேருக்குமே சட்டப்பூர்வமான விவாகரத்து கிடைத்துவிடுமென்றுதான் பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜீவனாம்சம் கொடுப்பாரா?: விஜய்யிடமிருந்து பிரிந்தே ஆவது என்பதில் சங்கீதா உறுதியாக இருக்கிறாராம். பிரிவதோடு மட்டுமின்றி தனக்கு திருப்தியான அளவு ஜீவனாம்சத்தையும் வாங்கியே தீர வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறாராம். முதலில் இந்த விஷயத்தில் முரண்டு பிடித்த விஜய்; இப்போது மனம் மாறி; எந்தப் பிரச்னையும் இல்லாமல் பிரிந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இந்நிலையில் விஜய்யின் தாய் ஷோபா சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

குறையே சொல்லமாட்டார்: அவர் கொடுத்திருந்த பேட்டியில், "விஜய் ரொம்பவே அமைதியான ஆள். அவருக்கு தோசை என்றால் ரொம்ப பிடிக்கும். காலை, மதியம், இரவு என எப்போது தோசையை கொடுத்தாலும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார். அவருக்கு தோசை இருந்தால் மட்டுமே போதுமானது. அதேபோல் நானோ, சங்கீதாவோ வீட்டில் யார் சமைத்தாலும் அவர் பெரிதாக குறையும் சொல்லமாட்டார். பிடிக்கவில்லை என்றால் சைலென்ட்டாக எழுந்து போய்விடுவார். அடுத்தவர்கள் மனதை கஷ்டப்படுத்தவே மாட்டார். அதில் நான் ரொம்பவே லக்கி" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X