Vijay: "விஜய்கிட்ட தெரியாம கேட்டுட்டேன்... கார்லயே மசாஜ் பண்ணுவார்... சஞ்சய் சொன்ன மிட்நைட் ரகசியம்
சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.
இதனைத் தொடந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில், விஜய் குறித்து அவரது நெருங்கிய நண்பரும், சீரியல் நடிகருமான சஞ்சய் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் முக்கியமாக விஜய்யுடன் மிட்நைட்டில் சென்ற த்ரில்லிங்கான அனுபவத்தை கூறியுள்ளது ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.
விஜய்யின் மிட்நைட் ரகசியம்: கோலிவுட்டின் ஹீரோக்களில் அதி உச்சத்தில் இருப்பவர் தளபதி விஜய். வாரிசு படத்தைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள லியோ அடுத்த மாதம் வெளியாகிறது. அதேவேகத்தில் தனது 68வது படத்திலும் கமிட்டாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் எஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, தற்காலிகமாக தளபதி 68 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தளபதி 68 படத்திற்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய விஜய், லியோ இசை வெளியீட்டு விழாவுக்காக ரெடியாகி வருகிறாராம். இதனிடையே விஜய்யிடம் இருக்கும் கார்கள் பற்றிய விவரங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கார்களின் மீது அதிக ஆர்வம் கொண்ட விஜய், சொந்தமாக டிரைவிங் செய்வதிலும் விருப்பம் உடையவர் என சொல்லப்படுகிறது.
பீஸ்ட் படம் வெளியான போது, இயக்குநர் நெல்சன், பூஜா ஹெக்டே, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஆகியோரை தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரவுண்ட் அடித்தார் விஜய். இந்நிலையில், விஜய்யிடம் இருக்கும் கார்கள் பற்றியும், அவரது டிரைவிங் குறித்தும் சீரியல் நடிகர் சஞ்சய் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். விஜய்யின் மிக நெருங்கிய நண்பர்களில் சீரியல் நடிகர் சஞ்சய்யும் ஒருவர்.
விஜய் டிரைவிங் செய்யும் போது ரொம்பவே த்ரில்லிங்காக இருக்கும் என சஞ்சய் கூறியுள்ளார். நண்பர்களுடன் இரவில் ஒருமுறை லாங் டிரைவிங் சென்றோம். அப்போது அவர் டிரைவ் பண்ணதை பார்த்து எல்லோருமே மிரண்டுவிட்டோம். ஆனால், அவர் சேஃப்டியாக டிரைவிங் செய்வதில் தான் கவனமாக இருப்பார் என்றுள்ளார். அதேபோல், ரோல்ஸ் ராய்ஸ் காரை நண்பர்களிடம் காட்டுவதற்காக வர சொல்லியிருந்தார்.
அப்போது, ரோல்ஸ் ராய்ஸ் காரில் அப்படி என்னதான் இருக்கு என தெரியாமல் கேட்டுவிட்டேன். அதன்பின்னர் காரில் உட்கார வைத்து அந்த காரின் வேல்யூ என்னவென்று காட்டிவிட்டார். அதாவது கார் சீட்டிலேயே மசாஜ் உள்ளன. விஜய்யும் காரில் செல்லும் போது மசாஜ் ஆப்ஷனில் தான் டிரைவிங் செய்வார். ஆரம்பம் முதலே விஜய் தனது கார்களை ஸ்பெஷலாக செலக்ட் செய்வார் என சஞ்சய் கூறியுள்ளார். இந்த வீடியோ விஜய் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











