Vijay: அரசியலில் விஜய்யுடன் கூட்டணியா..? போர் தொழில் சக்சஸ் மீட்டிங்கில் பொங்கிய சரத்குமார்

சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த மாதம் 9ம் தேதி வெளியானது.

விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன.

இதனையடுத்து போர் தொழில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர்.

அப்போது விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பிய நிரூபருக்கு சரத்குமார் காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.

 Vijay: Sarathkumars response to the question of alliance with Vijay in politics

அரசியலில் விஜய்யுடன் கூட்டணியா? அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், சரத்பாபு ஆகியோர் நடித்த போர் தொழில் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ரசிகர்களிடம் சூப்பரான வரவேற்பு கிடைத்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து போர் தொழில் சக்சஸ் மீட் நடைபெற்றது.

இதில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், இயக்குநர் விக்னேஷ் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது போர் தொழில் படம் குறித்தும் அதில் நடித்த அனுபவம் பற்றியும் சரத்குமார் பேசினார். அவரிடம் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. சமீபத்தில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை கொடுத்து பாராட்டு விழா நடத்தினார் விஜய்.

அப்போது மாணவர்கள் முன் பேசிய விஜய், தனது அரசியல் வருகை குறித்தும் லீட் கொடுத்திருந்தார். விஜய்யின் இந்த பேச்சு வைரலானதால் அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என பலரும் ஆதரவு தெரிவித்தனர். அப்போது நடிகர் சரத்குமாரும் தனது சமத்துவ மக்கள் கட்சி சார்பாக விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனால், விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தால் அவருடன் கூட்டணி வைப்பீங்களா என சரத்குமாரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சரத்குமார், ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவது குறித்து வரவேற்பு தெரிவித்திருந்தேன். மேலும், அவருடன் நான் கூட்டணி வைக்க விரும்பினாலும் விஜய்க்கு இதில் உடன்பாடு உள்ளதா என தெரியவில்லை. விஜய்யும் ஓக்கே சொன்னால் தான் கூட்டணி வைக்க முடியும் என்றார். தொடர்ந்து பேசிய சரத்குமார், கேள்வி கேட்ட நிரூபரிடம் முதலில் உங்கள் விருப்பம் என்னனு சொல்லுங்க, அதனை விஜய்யிடம் கேட்டுப் பார்க்கலாம் என காட்டமாக பதில் கூறினார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனக் கூறி சர்ச்சையை கிளப்பிவிட்டார் சரத்குமார். இதனால் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் தற்போது விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் தடாலடியாக பதிலளித்து லைம் லைட்டில் வந்துள்ளார் சரத்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X