அந்த அளவுக்கு காஞ்சி போய் இருக்கியா நீ.. படையப்பா படத்தில் டியூட் மாப்பிள்ளை.. விஜய் சாரதி ரிப்ளை!

சென்னை: இந்த டிசம்பர் மாதமே தமிழ் சினிமாவுக்கு ட்ரை மாதமாக மாறிவிட்டது. இந்நிலையில், சோகத்தில் இருந்த திரையரங்க உரிமையாளர்களை திடீரென சந்தோஷப்படுத்தும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை முன்னிட்டு படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளார்.

ரஜினிகாந்தே படத்திற்கு புரொமோஷன் செய்து வீடியோ வெளியிட்டு படையப்பா படம் உருவாக என்ன காரணம், முதலில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க நினைத்தது, அதன் பின்னர் நீலம்பரியாக ரம்யா கிருஷ்ணன் மாறியது, சிவாஜி கணேசன் கேட்ட அதிக சம்பளம், ஜெயலலிதாவுக்கும் தனக்கும் இடையே அப்போது இருந்த பஞ்சாயத்து என பல விஷயங்களை பேசி முடித்தார்.

Vijay Sarathy funny reply to a netizen who trolled him for Padaiyappa scene

அவரது வீடியோ உலகளவில் படையப்பா ரீ ரிலீஸை கொண்டு சென்று சேர்த்தது. மேலும், பாக்ஸ் ஆபீஸில் கடந்த 3 நாட்களாக தமிழில் அகண்டா 2வை எல்லாம் பந்தாடி முதல் இடத்தில் படையப்பா மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

படையப்பா படத்தில் விஜய் சாரதி: சன் டிவியில் சிறு வயதில் பலரும் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள். அப்போதெல்லாம் யூடியூப் எல்லாம் இல்லை. புதிய பட பாடல்களை பார்க்க வேண்டுமென்றால் இந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்களை தொகுப்பாளர் விஜய் சாரதி வெளியிடுவார். விக்ரமாதித்யா எனும் சன் டிவி தொடரிலும் நடித்திருந்தார். அந்த சமயத்தில் திடீரென சினிமாவிலும் விஜய் சாரதி நடித்த படம் தான் படையப்பா.

அந்த அளவுக்கு காஞ்சி போயிருக்கியா நீ: படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆன நிலையில், ஒரு பக்கம் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வரும் நிலையில், இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் படத்தை அக்குவேர் ஆணிவேராக பிரித்து விமர்சனம், மீம்ஸ், ஜஸ்டிஸ் ஃபார் நீலம்பரி என டிரெண்ட் செய்து வருகின்றனர். சிவாஜி அந்த படத்தில் சிவாஜி கணேசன் என்றே கையெழுத்துப் போடுகிறார் என்றும் நோட் பண்ணி சொன்ன நெட்டிசன்கள், தற்போது, "யாருடா நீ யாரை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டாலும் சம்மதம் சொல்ற.. அந்தளவுக்கு காஞ்சி போயிருக்கியா நீ என நெட்டிசன் ஒருவர் மீம் போட்ட நிலையில், அதற்கு அந்த கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சாரதி பதில் அளித்துள்ளார்.

தாய்மாமா படையப்பா சொன்னா:" 'Neengadhan Trending ipo'😂🤣
Am getting this from many friends. I myself witnessed a big laughter after this dialogue,including me.

But,wn Padayappa-my thaaimaama-in the movie asks me,I can only say YES. Dot
தாய்மாமா படையப்பா கேட்டா 'சரி' தானே" என விஜய் சாரதி அதற்கு பதில் அளித்துள்ளார். பாட்ஷா, படையப்பா, கில்லி போன்ற கமர்ஷியல் படங்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டுமே தவிர ஆராயக் கூடாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X