»   »  சுந்தர் சி படம்... 250 கோடி பட்ஜெட்... ஆனாலும் நோ சொன்ன விஜய்?

சுந்தர் சி படம்... 250 கோடி பட்ஜெட்... ஆனாலும் நோ சொன்ன விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரூ 250 கோடியில் சங்கமித்ரா என்ற படத்தை சுந்தர் சி உருவாக்கவிருப்பதாகவும், அதில் நாயகனாக விஜய் நடிக்கப் போகிறார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பாக மீடியா பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால் அந்தப் படத்தில் நடிக்காமல் விஜய் விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay say no to Sundar C's mega budget movie

இந்தப் படத்தில் நடிக்காமல் விஜய் விலகியதற்கு சில காரணங்களைச் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

முதல் காரணம், பட்ஜெட். விஜய்யின் படங்களின் அதிகபட்ச பட்ஜெட் 40லிருந்து 60 கோடிகள்தான். இந்த பட்ஜெட்டில் எடுத்த புலி பெரிய அடிவாங்கியது. தெறி படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகாததால் பெரும் இழப்பைச் சந்தித்தார் கலைப்புலி தாணு. எனவே இவ்வளவு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டால், அதை எப்படி வசூலிப்பார்கள் என்ற தயக்கம் விஜய்க்கு உள்ளதாம்.

அடுத்து விஜய்யின் இப்போதைய நிலைப்பாடு, ஆண்டுக்கு குறைந்தது 2 படங்களாவது தர வேண்டும் என்பது. சுந்தர் சியின் இந்த சரித்திரப் படம் வெளிவர குறைந்தது ஒன்றரை ஆண்டுகளாவது ஆகும். இவ்வளவு பெரிய கேப் சரிவருமா என்ற யோசனை அவரை இந்தப் படத்துக்கு நோ சொல்லவைத்துள்ளது.

எல்லாவற்றையும் விட, இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிப் படமாகிவிட்ட கபாலியை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தை நடிக்க விஜய் விரும்ப, அதற்கு ரஞ்சித்தும் சம்மதம் சொல்லிவிட்டார். அந்தப் படத்தையும் கலைப்புலி தாணுவே தயாரிக்கும் சூழல் இருப்பதால், இப்போதைக்கு சுந்தர் சி படத்தில் 'லாக்' ஆகிவிட வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறாராம் விஜய்.

English summary
Sources says that actor Vijay has decided to say no to Sundar C project for various reasons.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil