எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்.. 6 நாள் கூட அமைதியா இருக்க முடியல.. திருச்சியில் மாஸ் காட்டிய விஜய்!
சென்னை: முதலமைச்சர் ஆன பிறகு நேரு ஸ்டேடியத்தில் சில விஷயங்களை மட்டுமே பேசிய தளபதி விஜய் இன்று திருச்சியில் மறுபடியும் பீஸ்ட் மோடில் பட்டாசு வெடித்தது போல பேசியிருப்பது விஜய் ரசிகர்களையும் தவெக தொண்டர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எம்ஜிஆர் உடன் கம்பேர் எல்லாம் பண்ண வேண்டாம் என்றும் எம்ஜிஆர் எம்ஜிஆர் தான். நாம எம்ஜிஆர், பெரியார், அண்ணா வழியில் அவர்கள் காட்டிய பாதையில் நடக்கும் விஜய் அவ்வளவு தான் என்று தன்னடக்கத்துடன் எப்போதும் போல பேசி மக்களை கவர்ந்துள்ளார்.

6 மாதம் வரை வெயிட் பண்ணுவோம் என பேசிவிட்டு 6 நாள் கூட பொறுமையாக இருக்க முடியவில்லை என மு.க. ஸ்டாலின் குறித்தும் ஓபனாகவே பேசி ஸ்கோர் செய்துவிட்டார்.
எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்: தமிழ்நாட்டில் நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்து முதலமைச்சரான முதல் நபர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அவரது கட்சியை எடுத்து நடத்தி நடிகை ஜெயலலிதாவும் திமுகவை தோற்கடித்து முதலமைச்சராக வெற்றிப் பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சரியான தலைமை இல்லாமல் தவிக்க திமுக ஆட்சியை பிடித்தது. திமுக - அதிமுகவுக்கு மாற்றாக யாருமே வரமாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு தவெக கட்சியை தொடங்கி விஜய் இந்த தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகவே மாறியுள்ளார். எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு வருகையில், எம்ஜிஆர் எம்ஜிஆர் தான் என்றும் நான் என்றுமே உங்கள் விஜய் தான் என்றும் 1977ல் இப்படி ஓட்டுப் போட்டிருக்கலாம் என்று செம பஞ்சாகவும் பேசியுள்ளார்.
6 நாள் கூட: விஜய்யின் தவெக ஆட்சியமைக்க திமுகவின் கூட்டணி கட்சிகளின் தயவு தேவைப்பட்ட நிலையில், பெருந்தன்மையுடன் முக ஸ்டாலின் விஜய் ஆட்சியமைக்க வழி வகை செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால், ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் தவெகவுக்கு வந்த நிலையில், தற்போது விஜய் ஆட்சியமைக்கக் கூடாது என்பதற்காக செயல்பட்டதாக பேசி வருகின்றனர். இந்நிலையில், 6 மாதம் வரை அமைதி காப்போம் என சொல்லிவிட்டு 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை என அடித்து நொறுக்கி விட்டார்.
மக்கள் தற்குறிகளா?: உங்களுக்கும் இதே மக்கள் தானே ஓட்டுப்போட்டாங்க. எனக்கு ஓட்டுப்போட்ட உடனே அவர்களை தற்குறின்னு எப்படி சொல்லலாம். வேறு கிரகத்தில் இருந்தா வந்து இறங்கி உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. மக்களை மதிக்கத் தெரியாதவர்களை மக்கள் தூக்கி வீசிவிட்டனர் என்றும் தான் முதலமைச்சர் அல்ல முதல் சேவகன் என்றும் விஜய் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications