குட்டி ஸ்டோரி ஸ்டாக் இல்லப்பா... நெல்சனை கலாய்த்த விஜய்

சென்னை : நடிகர் விஜய்யின் சன் டிவி இன்டர்வியூ ட்ரெண்டிங் ஆனது. விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த பேட்டியில் நெல்சனின் இடக்கு மடக்கான பல கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்தார் விஜய். அவரின் இந்த இயல்பான அணுகுமுறை சிறப்பாக அமைந்தது.

டாக் ஆப் தி டவுன் பீஸ்ட்

டாக் ஆப் தி டவுன் பீஸ்ட்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் தான் தற்போது டாக் ஆப் தி டவுனாக உள்ளது. எங்கு பார்த்தாலும் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்தே பேசி வருகின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்னும் இரு தினங்களில் படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.

அதிரடி கிளப்பும் டிக்கெட் புக்கிங்

அதிரடி கிளப்பும் டிக்கெட் புக்கிங்

இந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக பீஸ்ட் ரிலீசாக உள்ளது. அனைத்து மொழிகளிலும் பாடல்கள் மட்டுமின்றி ட்ரெயிலர், தீம் மியூசிக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங்கும் அதிரடி கிளப்பி வருகிறது.

சிறப்பான பிரமோக்கள்

சிறப்பான பிரமோக்கள்

படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே படத்தின் டிக்கெட் புக்கிங் மாஸ் கிளப்பி வருகிறது. படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் மட்டுமில்லாமல் சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வரும் அடுத்தடுத்த ப்ரமோக்களும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்தடுத்த பிரமோக்கள்

அடுத்தடுத்த பிரமோக்கள்

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்த ப்ரமோக்களை ட்விட்டர் பக்கத்தில் மட்டுமில்லாமல், அதன் நெட்வொர்க் டிவிக்களிலும் ஒளிபரப்பி வருகிறது. இந்தப் ப்ரமோக்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. நேற்றைய தினம் சன் டிவியில் விஜய் அளித்த பேட்டியும் படத்தின் எதிர்பார்ப்பிற்கு மிகப்பெரிய துணையாக உள்ளது.

சிறப்பான விஜய் பேட்டி

சிறப்பான விஜய் பேட்டி

இதனிடையே, நேற்றைய தினம் அளித்துள்ள பேட்டியில் விஜய் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். எப்போதும் அவரது ஆடியோ ரிலீஸ் விழா மிகவும் பிரம்மாண்டமாக அமையும். அந்த நிகழ்வில் அவர் குட்டி ஸ்டோரியும் சொல்வார். பீஸ்ட் படத்தின் ஆடியோ ரிலீஸ் தற்போது ரத்தாகியுள்ளது.

 குட்டி ஸ்டோரி ஸ்டாக் இல்லை

குட்டி ஸ்டோரி ஸ்டாக் இல்லை

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் அளித்துள்ள பேட்டியில் நெல்சன் அவரிடம் குட்டி ஸ்டோரி சொல்லும்படி கேட்டார். அப்போது ஸ்டாக் இல்லப்பா என்று முதலில் விஜய் கிண்டல் அடித்தார். அப்போது நெல்சன், தேடிப் பார்க்க சொன்னதையடுத்து அவர் குட்டி ஸ்டோரி சொன்னார்.

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

புல்லாங்குழலையும் கால்பந்தையும் ஒப்பிட்டு அவர் ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார். மற்றவர்களிடம் மிதிபடும் கால்பந்து புல்லாங்குழலிடம் அதுகுறித்து கேட்க, தான் வைத்துள்ள காற்றை இசையாக மற்றவர்களுக்கு தருவதாகவும் ஆனால் கால்பந்து அதை செய்வதில்லை என்றும் புல்லாங்குழல் கூறியதாக விஜய் குட்டி ஸ்டோரி சொன்னார்.

Recommended Video

Will Thalapathy become Thalaivan? Vijay answers | Beast Vijay Interview | Filmibeat Tamil
புல்லாங்குழல் -கால்பந்து ஸ்டோரி

புல்லாங்குழல் -கால்பந்து ஸ்டோரி

அதனால்தான் தன்னை அனைவரும் முத்தமிடுவதாக புல்லாங்குழல் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கால்பந்தை போல இல்லாமல் புல்லாங்குழலாக இருந்து அனைவரையும் கவர வேண்டும் என்றும் விஜய் தெரிவித்திருந்தார். இந்த குட்டி ஸ்டோரி வேற லெவலில் உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X