அந்த காமெடி நடிகருக்கு நோ சொன்ன விஜய்?.. தளபதி 69 படத்தை அந்த இயக்குநர் தான் இயக்கப் போறாரா?

சென்னை: தளபதி 69 படத்திற்கு இன்னும் நடிகர் விஜய் இயக்குநரை லாக் செய்யவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை தளபதி 69 படத்தை இயக்கப் போவது இவர், அவர் என பலரது பெயர்கள் அடிபட்டு வருகிறது.

ஆனால், நடிகர் விஜய் இதுவரை யாரையும் ஓகே சொல்லவில்லை என்று கூறுகின்றனர். மேலும், சமீபத்தில் அடிபட்ட அந்த காமெடி நடிகரின் பெயரும் தற்போது லிஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

Vijay says No to RJ Balaji for Thalapathy 69 and Atlee will take the project buzz trending


தளபதி 68 படத்தை எந்த இயக்குநர் இயக்கப் போகிறார் என லேட்டஸ்ட் உருட்டுகள் உலா வருகின்றன.

கடைசி கட்டத்தில் கோட்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதுதான் கடைசி ஷெட்யூல் என்றும் மார்ச் மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் அதன் பின்னர் சிஜி மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தான் நடக்கும் என்கின்றனர்.

இதுவரை அடிபட்ட பெயர்கள்: இயக்குநர் ஷங்கர், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் என பல பெரிய இயக்குநர்கள் பெயர்கள் இதுவரை தளபதி 69 படத்தை இயக்கப் போவதாக அடிபட்டு வந்தன. மேலும், இயக்குநர்கள் எச். வினோத் மற்றும் ஆர்ஜே பாலாஜி பெயர்கள் கூட சமீபத்தில் அடிபட்டன. ஆனால், இவர்களில் யாருமே தளபதி 69 படத்தை இயக்கப் போவதில்லை என லேட்டஸ்ட் அப்டேட்கள் கூறுகின்றன.

ஆர்ஜே பாலாஜி இல்லை: கடைசியாக மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்ஜே பாலாஜி தான் தளபதி 69 படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு காரணம் அவரது பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தீவிரமாக ஒரு படத்துக்காக திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என அவர் கொடுத்த பில்டப் தான். ஆனால், அவரது கதையை நடிகர் விஜய் ஓகே சொல்லாமல் ரிஜெக்ட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

அட்லீ தான் இயக்கப் போறாரா?: ஆளப்போறான் தமிழன் என்கிற டைட்டிலில் அரசியல் களத்துடன் உருவாக உள்ள படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் அட்லீ தான் இயக்கப் போகிறார் என்றும் சமந்தா தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்றும் லேட்டஸ்ட் உருட்டுகள் வெளியாகி உள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இதுவும் டவுட்டு தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X