11 வருஷத்துக்கு முன்னாடி அரசியலில் ஆர்வமில்லாத விஜய்.. இப்போ ஆளே மாறிட்டாரே.. த்ரோபேக் வீடியோ!

சென்னை: சர்க்கார் படத்தில் கூட அரசியலுக்கு வரும் விஜய் தன்னை முதலமைச்சராக தேர்வு செய்யாமல் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிப்பது போன்ற காட்சியை தான் வைத்திருப்பார். ஆனால் தற்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆகும் முயற்சியில் அதிரடியாக அரசியல் தலைவராக மாறியுள்ளார் தளபதி விஜய்.

தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் கோட் மற்றும் தளபதி 69 படங்களை முடித்துவிட்டு அதன் பின்னர் முழு நேரமாக மக்களுக்கான அரசியல் பணியில் ஈடுபடப் போவதாக தனது அறிவிப்பில் கூறியுள்ளார். ஆனால், 11 ஆண்டுகளுக்கு முன்னதாக தனக்கு அரசியலில் விருப்பமே இல்லை என நடிகர் விஜய் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vijay says not interested in politcs throwback video trending now

பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா: கடந்த ஆண்டு மட்டும் தமிழ் சினிமாவில் வாரிசு மற்றும் லியோ படங்கள் மூலமாக 900 கோடி ரூபாய் சம்பாதித்து கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் பாட்ஷாவாக மாஸ் காட்டியவர் நடிகர் விஜய். இந்த ஆண்டு வெளியாக உள்ள கோட் திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி ரூபாய் படமாக வரும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

இது நம்ம சர்க்கார்: விஜய் மக்கள் இயக்கம் மூலமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களுக்கு நலத்திட்டப் பணிகளை செய்து வரும் நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தை கிராமப்புற அரசியலில் ஈடுபடுத்தி அதில் வெற்றியும் கண்டு வந்தார். மேலும், கடந்த ஆண்டு முதல் தீவிரமாக விஜய் அரசியலுக்குள் வரப்போவதை வெளிப்படையாக தனது செயல்கள் மூலம் வெளிக்காட்டி வந்தார்.

மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விஜய், மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநெல்வேலிக்கு சென்று நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார். சமீபத்தில் நடைபெற்ற சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் விஜயின் அரசியல் வருகை குறித்து அறிவித்து விட்டார். இந்நிலையில் பிப்ரவரி 2ம் தேதி என் பெயர் தமிழக வெற்றி கழகம் என்பதை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிவித்துள்ளார் விஜய்.

அரசியலில் இன்ட்ரஸ்ட் இல்லை: ஆனால், 11 வருஷத்துக்கு முன்னாடி நடிகர் விஜய் பேட்டி ஒன்றில் பேசுகையில் தனக்கு அரசியலில் இன்ட்ரஸ்ட் இல்லை என்றும் தான் எங்கேயும் அரசியலுக்கு வரப் போவதாக அறிவிக்கவில்லை என்றும் ஒன்று இரண்டு பத்திரிகைகள் அப்படி என்னைப் பற்றி எழுதுகின்றனர். அதையெல்லாம் பார்த்துவிட்டு ஓ இப்படி எல்லாம் நம்மள பத்தி எழுதுறாங்க அப்படின்னு நினைச்சு சிரிச்சு இருக்கேன் என அவர் பேசிய த்ரோ பேக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மீண்டும் நடிப்பாரா?: ஆரம்பத்தில் அரசியலில் இன்ட்ரஸ்ட் இல்லை என முழுக்க முழுக்க சினிமாவில் ஈடுபாடு கொண்டிருந்த விஜய் தற்போது அரசியல் பக்கம் தாவி உள்ள நிலையில், 2026 தேர்தலில் ஒருவேளை பெரிய சரிவை சந்தித்தால் மீண்டும் அவர் தனது பேச்சை மாற்றிக் கொண்டு நடிப்பார் என்றும் எல்லாம் 2 ஆண்டுகளுக்கான ஆக்‌ஷன் மேடம் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X