Leo Janany: என் வைஃப் மாதிரியே பேசுறீங்கன்னு விஜய் சொன்னாரு.. ரொம்ப ஹேப்பி.. பிக் பாஸ் ஜனனி பேட்டி!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிக் பாஸ் ஜனனி நடிகர் விஜய்யுடன் காஷ்மீரில் நடித்த அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவிலும் நடிகை ஜனனி கலந்து கொண்டார். நடிகர் விஜய்யின் ரீல் மகனாக நடித்த மேத்யூ தாமஸ் மற்றும் மகளாக நடித்த இயல் உள்ளிட்டோரும் பங்கேற்று இருந்தனர்.

Vijay says to Bigg Boss Janany she speaks like his wife Sangeetha Vijay

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனலில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து விஜய் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார் பிக் பாஸ் ஜனனி.

பிக் பாஸ் பிரபலங்கள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தீவிர பிக் பாஸ் ரசிகர் என்றே தெரிகிறது. தனது படங்களில் தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களையும் பிக் பாஸ் போட்டியாளர்களையும் படங்களில் நடித்து வருகிறார். கைதி படத்தில் கேபிஒய் தீனா நடித்த நிலையில், விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஸ்வரி, மாயாவை தொடர்ந்து தற்போது லியோவில் ஜனனியும் சாண்டி மாஸ்டரும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து விட்டனர்.

ஜனனிக்கு கிடைத்த ஜாக்பாட்: கரு கரு கருப்பாயி, தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் பாடல்கள் எல்லாம் இடம் பெற்ற அந்த காபி ஷாப் சண்டைக் காட்சி தான் லியோ படத்தின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த சீனில் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பே ஜனனிக்கு அடித்துள்ளது. மேலும், ஜனனிக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சிகளும் லியோவில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

என் வைஃப் போலவே பேசுறீங்க: இந்நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு ஜனனி அளித்த பேட்டியில் செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் வந்து பேசும் போது, தனது பேச்சை பார்த்து விட்டு, என் வைஃப் அவரோட சிஸ்டர்ஸ் மாதிரியே பேசுறீங்க.. கதைக்குதீங்க என்று தான் பேசுவாங்க என இலங்கை தமிழில் நான் பேசியதை பார்த்து கேட்டார். மேலும், என் வைஃப்பும் ஜாஃப்னா தான் தெரியுமா? என்றார். செம சைலன்ட்டாக இருப்பார். ரொம்ப அமைதியா பேசுவார்.. அடடா என்னைப் போலவே என்னோட தளபதியும் இருக்காரே என நினைச்சு ரொம்பவே ஜாலியா இருந்துச்சு என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X