விஜய்யே பயந்துட்டாரு.. ஜெட் வேகத்தில் ஜெயிலர் கலெக்‌ஷன்.. லியோவுக்கு வந்த பிரஷர்.. பிரபலம் பளிச்!

சென்னை: ஜெயிலர் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருப்பதை பார்த்து நடிகர் விஜய்யே பயந்துட்டாரு என வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களிலேயே விக்ரம் படத்தின் வசூலை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக நடிகர் விஜய்க்கும் லியோ பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Vijay scared after look into Jailer Box office report - Valaipechu Anthanan Interview

தர்பார், அண்ணாத்த படங்களில் கன்டன்ட் சரியில்லாததால் ரசிகர்கள் பெரிய ஆதரவு அளிக்கவில்லை என்றும் ஜெயிலர் படத்தின் கதை சுமாராக இருந்தாலும், மொக்கையாக இல்லாத காரணம் மற்றும் விஜய் vs ரஜினி பஞ்சாயத்து காரணமாக மக்கள் ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றியுள்ளனர் என்றார்.

திருப்பியடிச்சிடுச்சு: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை புகழ்வதாக நினைத்துக் கொண்டு சரத்குமார் உள்ளிட்டவர்கள் பேசிய பேச்சு விஜய்க்கு ஃபேவராக அமையும் என்று நினைத்தனர். ஆனால், அது ரிவர்ஸ் கியரில் திருப்பியடிச்சு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு பலமாகவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலாகவும் மாறிவிட்டது என வலைப்பேச்சு அந்தணன் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில் கூறியுள்ளார்.

விக்ரம், பொன்னியின் செல்வன் வசூலுக்கு வேட்டு: கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், ஜெயிலர் படத்துக்கு பெரிய பிரஷர் இருந்தது. அதனால், அந்த படத்தின் பிசினஸை சன் பிக்சர்ஸ் பக்குவமாக பார்த்து செய்ததன் விளைவு இந்த படம் வெகு சீக்கிரமாக அந்த இரு படங்களின் வசூலை முறியடித்து விடும் என தெரிகிறது என்றார்.

Vijay scared after look into Jailer Box office report - Valaipechu Anthanan Interview

விஜய்யே பயந்துட்டாரு: இந்த வருஷம் ஆரம்பத்தில் அஜித்துடன் போட்டிப் போட்ட நிலையில், வாரிசு படத்தால் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த முடியவில்லை. படத்தின் கன்டென்ட்டும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில், லியோ படம் நிச்சயம் பெரிய வசூல் பெறும் அல்லது பெற வேண்டும் என்கிற அழுத்தம் ஏற்பட்டுள்ளது உண்மை தான்.

நடிகர் விஜய்யே ஜெயிலர் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருப்பதை அறிந்து பயந்து விட்டார் என்கின்றனர். அதற்காகத்தான் மலேசியாவில் எல்லாம் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தி பெரியளவில் பிசினஸ் பண்ண வேண்டும் என போராடி வருகின்றனர். எப்படி இருந்தாலும், கடைசியில் ஜெயிக்கப் போவது கன்டென்ட் தான். லியோ படம் ஆரம்பத்தில் ரசிகர்களை வரவழைத்து விடும். ஆனால், ரசிகர்களை தொடர்ந்து இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் படம் நல்லா இருக்கணும். லோகேஷ் நிச்சயம் விஜய்யின் நம்பிக்கையை இந்த முறை காப்பாற்றுவார் என தெரிகிறது எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X