விஸ்வாசம் படத்தில் மறைமுகமாக விஜய் பற்றி பேசும் அஜித்.. நீங்க கவனீச்சிங்களா..?
விஸ்வாசம் படத்தில் விஜய் பற்றி அஜித் பேசியதாக சமூகவலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: விஸ்வாசம் படத்தில் விஜய் பற்றி நடிகர் அஜித் மறைமுகமாக ஒரு காட்சியில் பேசி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் நேற்று ரிலீசானது. இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் குறித்து அஜித் மறைமுகமாகப் பேசி இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கத்தில் கூறி வருகின்றனர்.
அதாவது, படத்தில் ஒரு சண்டைக்காட்சியின் போது தன் மகளிடம் அஜித் 'இதுவரை எத்தனை போட்டில ஜெயிச்சுருக்க?' எனக் கேட்பார். அதற்கு அச்சிறுமி, '62' எனப் பதிலளிப்பார். உடனே அஜித் 'அடங்கேப்பா' என்று ட்ரைலரில் வரும் வசனத்தை சொல்வார்.
இந்தக் காட்சியைத் தான் விஜய் பற்றி அஜித் பேசியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் இதுவரை விஜய் 62 படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தளபதி 63 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, விஜய், அஜித் ரசிகர்களிடையே சமூகவலைதளப் பக்கத்தில் மோதல் இருக்கும். சமயத்தில் இது கைகலப்பாக மாறிய சம்பவங்களும் உண்டு. இந்த சூழ்நிலையில் தான் விஸ்வாசம் படத்தில் விஜய் பற்றி அஜித் பேசியதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











